யுத்தத்தால் மரணித்தோருக்கு நினைவுத் தூபி – அங்கஜன் ஜனாதிபதிக்கு கடிதம்!

01 Oct, 2024 | 05:15 PM
image

யுத்தத்தால் மரணித்தோருக்கான நினைவுத் தூபியை அமைப்பதோடு காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ்களை வழங்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்  ஜனாதிபதிக்கு அங்கஜன் இராமநாதன் கடிதம் எழுதினார்.  

அக்கடிதத்தில்,2016 ஆம் ஆண்டு மார்ச் 08 ஆம் திகதி பாராளுமன்றத்தில் உரையாற்றிய ஜே.வி.பியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பிமல் ரத்நாயக்க ,இன வேறுபாடின்றி யுத்தத்தின் போது உயிரிழந்த அனைவரையும் நினைவுகூரும் வகையில் அரசாங்கம் நினைவுத்தூபியொன்றை அமைப்பதோடு, மே 19 ஆம் திகதியை நினைவு நாளாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும் தெரிவித்திருந்தார்.  

அதனை கருத்தில் கொண்டு,  யுத்தத்தினால் தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் குடும்பங்கள் அனுபவித்த துன்பங்களை ஏற்று, அமைக்கப்படும் நினைவுத்தூபியானது முழு நாட்டின் ஒற்றுமை, நல்லிணக்கம் ஆகியவற்றை வலுப்படுத்துவதோடு நினைவேந்தலுக்கான அடையாளமாகவும் அமையும். 

மேலும், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சான்றிதழ் வழங்குவதற்கும் அரசாங்கம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியமாகும். இந்தச் சான்றிதழ்கள், காணாமல் ஆக்கப்பட்டவர்களின் குடும்பங்கள் எதிர்கொள்ளும் சட்டச் சிக்கல்களைத் தீர்க்க உதவுவதோடு, இழப்பீடு மற்றும் பிற வகையான ஆதரவை அணுகுவதற்கும் உதவும் – என அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

உலக சுகாதார மாநாட்டில் முக்கிய சந்திப்புகள்:...

2026-05-20 15:11:17
news-image

சமூக ஊடகங்களில் தமிழ்நாட்டின் தலைவர்களை வைத்து...

2026-05-20 15:22:19
news-image

திருகோணமலை - கண்டி வீதியில் வாகன...

2026-05-20 14:53:21
news-image

காணாமலாக்கப்பட்டோர் பற்றிய அலுவலகத்தினால் களுவாஞ்சிக்குடியில் விசாரணைகள்...

2026-05-20 14:14:27
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம் 

2026-05-20 13:48:40
news-image

மூதூரில் மரம் சாய்ந்து விழுந்ததில் மீனவர்களின்...

2026-05-20 13:32:51
news-image

நாளை பாராளுமன்றத்தில் பெருந்தோட்டத் துறை பாதுகாப்பு...

2026-05-20 13:12:04
news-image

கச்சத்தீவு மீட்பு விடயத்தை தேர்தல் கால...

2026-05-20 12:28:10
news-image

பொகவந்தலாவையில் நிறுத்தப்பட்டிருந்த லொறியுடன் பேருந்து மோதி...

2026-05-20 12:44:06
news-image

மாகாண அரசாங்க பிரதான குற்றப்பகர்வு அலுவலகங்களை...

2026-05-20 14:51:02
news-image

“பாடசாலை அதிபரை மாற்றவேண்டாம்” - யாழ்....

2026-05-20 12:46:00
news-image

புஸ்ஸல்லாவையில் மோட்டார் சைக்கிள் மோதி முதியவர்...

2026-05-20 12:33:15