கோப்பாய் ஆசிரியர் கலாசாலையின் 101 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் கலாசாலை தின விழா இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை 8.30 மணிக்கு கலாசாலை ரதிலக்க்ஷ்மி மண்டபத்தில் நடைபெற்றது.
கலாசாலை அதிபர் சந்திரமௌலீசன் லலீசன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவரும் யாழ்ப்பாண வலயக் கல்விப் பணிப்பாளருமாகிய ஜமுனா ராஜசீலன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
கலாசாலை நிறுவுவதற்கு நிலத்தை வழங்கிய சேர் பொன் இராமநாதனை கௌரவப்படுத்தும் வகையில் இராமநாதன் நினைவுப் பேருரை நடைபெற்றது.
'ஆசிரிய கல்வியியலாளர்களின் தத்துவ ஆராய்ச்சிப் பட்டங்கள் தொடர்பில் மேற்கிளம்பும் சவால்களும் அவற்றை தாண்டிப் பயணித்தலும் ' என்ற பொருளில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறை விரிவுரையாளர் இ.சர்வேஸ்வரா நினைவுப் பேருரை ஆற்றினார். கலாசாலையில் உள்ள சிவன் ஆலயப் பிரதம குரு சிவசிறீ பா. செல்வசேனக்குருக்கள் ஆசியுரை வழங்கினார்.
நிகழ்வில் கலாசாலையின் பழைய மாணவர்கள் மற்றும் முன்னாள் அதிபர், விரிவுரையாளர்களும் கலந்து சிறப்பித்தனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM