பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார் வழிபாடு..!

Published By: Digital Desk 2

01 Oct, 2024 | 04:59 PM
image

எம்மில் பலருக்கும் புத்திர தோஷம் ஏற்பட வாய்ப்பு உண்டு. வேறு சிலருக்கு குழந்தை பிறந்து இறந்து விடும் அல்லது பிறந்த சில மாதங்களிலேயே இறந்துவிடும். 

இதுவும் புத்திர தோஷத்தினால் உண்டாகும் புத்திர சோகமாகும். வேறு சிலருக்கு குழந்தை பிறந்தவுடன் குறிப்பிட்ட காலகட்டம் வரை அந்த பிள்ளையை பிரிந்திருப்பார்கள். 

இதுவும் புத்திர தோஷத்தையும், புத்திர சோகத்தையும் உள்ளடக்கிய பாலாரிஷ்ட தோஷமாகும்.

எம்மில் சிலர் தாம்பத்தியத்தில் ஈடுபட்டு கருவுற்ற பின் அந்த கருவினை பல்வேறு காரணங்களை முன்வைத்து அழித்து விடுவர். 

இதுவும் கடுமையான புத்திர தோஷத்தை ஏற்படுத்தும். இதுபோன்ற தோஷங்களை நீக்குவதற்கு எம்முடைய முன்னோர்கள் எளிமையான சில வழிமுறைகளை பரிகாரங்களாக முன்மொழிந்திருக்கிறார்கள்.

அருகில் இருக்கும் ஆலயத்தில் அமையப் பெற்றிருக்கும் சப்த கன்னிகளுக்கு அல்லது தனித்து இருக்கும் சப்த கன்னிமார்களுக்கு புதிய வஸ்திரம் சாற்றி வழிபட வேண்டும்.  சப்த கன்னி வழிபாட்டை தொடர்ச்சியாக ஏழு வாரங்களுக்கு மேற்கொள்ள வேண்டும்.

இதனைத் தொடர்ந்து உங்களுக்கு அறிமுகமான அல்லது அறிமுகமற்ற பூப்படையாத ஏழு பெண் பிள்ளைகளை தெரிவு செய்து, அவர்களுக்கு ஆண்டிற்கு இரண்டு முறை புதிய வஸ்திரங்களை வாங்கி அன்பளிப்பாக கொடுக்க வேண்டும். 

அதனுடன் அவர்கள் விரும்பும் வகையில் உணவையும், நன்கொடையையும் அளித்து அவர்களை மகிழ்விக்க வேண்டும்.

நீங்கள் எந்த லக்னத்தில் பிறந்திருக்கிறீர்களோ அந்த லக்னத்திலிருந்து ஐந்தாம் இடத்தினை உற்று நோக்குங்கள். அந்த இடத்தின் அதிபதிக்கான கிரகத்தினையும், அந்த அதிபதிக்குரிய அதி தேவதைகளையும் அந்த கிரகத்திற்குரிய கிழமைகளில் வழிபட வேண்டும்.

மேலும் உங்களுடைய வீட்டுக்கு அருகே இருக்கும் அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் வைத்தியசாலைக்குச் சென்று அங்கு பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் ஒரு பெண்மணிக்கு பிரசவ காலங்களில் அவசியமாக தேவைப்படும் பொருளை அல்லது நிதியை தானமாக வழங்க வேண்டும்.  

இதற்கு வாய்ப்பும், சந்தர்ப்பமும் அமையவில்லை என்றால் அங்கு அதாவது அரசாங்க அனுசரணையுடன் இயங்கும் வைத்தியசாலையில் குறிப்பிட்ட திகதியில் பிறக்கும் பிள்ளைகளுக்கு வெள்ளியினாலான நாணயத்தை பரிசாக வழங்கி வாருங்கள். 

இவை அனைத்தும் உங்களுக்கு ஏற்பட்ட புத்திர தோஷத்தையும், புத்திர சோகத்தையும் நீக்கி, அது தொடர்பான எதிர்மறையான விடயங்களில் இருந்து உங்களை பாதுகாக்கும். அதன் பிறகு நீங்கள் எதிர்பார்க்கும் சுப பலன்கள் கிட்டும் அல்லது அதற்கான வழிவகைகள் புலப்படும்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33
news-image

கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான...

2024-09-28 18:24:53
news-image

காரிய தடை விலகுவதற்கான எளிய பரிகாரம்

2024-09-26 18:39:17
news-image

உங்களுக்கு நன்மை பயக்கும் சூட்சும நட்சத்திரங்கள்

2024-09-25 18:24:41
news-image

ஆயுள் முழுவதும் ஆதரிக்கும் நட்சத்திரங்கள்...!?

2024-09-24 17:22:30
news-image

சகல ஐஸ்வரியத்தையும் வழங்கும் பிரத்யேக தீப...

2024-09-23 22:16:18