ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு பாதிப்பிற்குரிய சிகிச்சை

Published By: Digital Desk 2

01 Oct, 2024 | 04:55 PM
image

எம்மில் சிலருக்கு அவர்கள் வெளியேற்றும் சிறுநீரின் நிறம் மாற்றமடைந்து இருந்தாலோ அல்லது இயல்பாக வெளியேற்றும் சிறுநீரின் அளவு குறைந்திருந்தாலோ அவர்களுக்கு ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும் என வைத்தியர்கள் தெரிவிக்கிறார்கள்.

உங்களது சிறுநீரின் நிறம் அடர் வண்ணத்தில் இருந்தாலும் அல்லது வேறு வண்ணத்தில் இருந்தாலும் அல்லது சிறுநீரின் அளவு மிக குறைவாக வெளியேறினாலும் இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருக்கக்கூடும். 

மேலும் தசை வலி, சோர்வு, தசை பலவீனம் ஆகிய அறிகுறிகளும் ஏற்பட்டிருந்தால் உங்களுக்கு தசைகளில் உள்ள திசுக்கள் சேதமடைந்து பாதிப்பை ஏற்படுத்தி இருக்கும். வேறு சிலருக்கு மூட்டு வலி, வலிப்பு, அதீத சோர்வு, உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகளும் ஏற்படலாம். 

இவர்களுக்கு வைத்தியர்கள் தசை திசு சிதைவு பாதிப்பு ஏற்பட்டிருக்க கூடும் என அவதானித்து அதனை உறுதிப்படுத்திக் கொள்வதற்காக பிரத்யேக பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு பரிந்துரைப்பர்.

பொதுவாக விபத்து ஏற்படும்போது காயமடையும் தசை பகுதியிலிருந்து மயோகுளோபின் எனும் ஒரு புரதசத்து ரத்த ஓட்டத்தில் கலக்கிறது. 

இது சிறுநீரகத்தை அடைந்து, சிறுநீரகத்தால் வடிகட்டும் போது.. சிறுநீரக செல்களை சேதப்படுத்துகிறது. 

இதனால் சிலருக்கு திடீரென்று சிறுநீரக கோளாறு பாதிப்பும் ஏற்படக்கூடும். வேறு சிலருக்கு எலும்பு தசைகள் கூட பாதிக்கப்படலாம்.

எதிர்பாராத வகையில் நடைபெறும் விபத்து மற்றும் காயங்கள், சில மருந்துகளின் பக்க விளைவுகள், பாரம்பரிய மரபணு தசை கோளாறுகள், சமச்சீரற்ற உடல் வெப்பநிலை மாறுபாடு, வலிப்பு, நீண்ட நேர சத்திர சிகிச்சை முறைகள், கடுமையான நீர்ச்சத்து குறைபாடு என பல்வேறு காரணங்களாலும் கூட இத்தகைய பாதிப்பு ஏற்படக்கூடும் என வைத்தியர்கள் விவரிக்கிறார்கள். 

மேலும் இதற்கு உரிய முறையில் உடனடியாக சிகிச்சைகளை மேற்கொள்ளாவிட்டால் சிறுநீரக செயலிழப்பு மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற பாரிய பாதிப்பு ஏற்பட்டு உயிருக்கு அச்சுறுத்தல் உண்டாகக்கூடும் என எச்சரிக்கிறார்கள்.

இதன் போது மருத்துவர்கள் சிறுநீர் பரிசோதனை, குருதி பரிசோதனை, தசை திசு பரிசோதனை ஆகியவற்றை மேற்கொண்டு, பாதிப்பின் தன்மையை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் நவீன மருத்துவ தொழில் நுட்பங்களால் கண்டறியப்பட்ட பிரத்யேக மருந்தியல் சிகிச்சைகள் மூலம் இதற்கு முழுமையான நிவாரணத்தை அளிக்கிறார்கள்.

வைத்தியர் வேணி
தொகுப்பு அனுஷ

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

டிரிக்கர் ஃபிங்கர் எனும் கை விரலில்...

2024-10-08 17:11:34
news-image

கருவிழி மாற்று சத்திர சிகிச்சை...!?

2024-10-05 17:31:43
news-image

அறிவாற்றல் குறைபாடு பாதிப்பிற்குரிய சிகிச்சை

2024-10-04 17:07:05
news-image

ராப்டோமயோலிசிஸ் எனும் தசை திசு சிதைவு...

2024-10-01 16:55:55
news-image

எக்டோபிக் பீட்ஸ் எனும் சமச் சீரற்ற...

2024-09-30 17:00:57
news-image

பச்சிளம் குழந்தைகளுக்கு ஏற்படும் தட்டையான பாத...

2024-09-26 16:56:32
news-image

சர்க்கரை நோயால் செவித்திறன் பாதிப்பு ஏற்படுமா..?

2024-09-25 16:21:32
news-image

மூட்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானிக்கும் நவீன...

2024-09-24 17:58:19
news-image

சர்கோபீனியா எனும் தசை சிதைவு பாதிப்பிற்குரிய...

2024-09-23 17:07:13
news-image

கல்லீரல் அழுத்த பாதிப்புக்கான சிகிச்சை

2024-09-23 16:39:09
news-image

இதய ரத்த நாள அடைப்பு பாதிப்பை...

2024-09-20 02:54:17
news-image

புற்றுநோய் பாதிப்பிற்கு நிவாரணம் அளிக்கும் 4...

2024-09-17 15:21:49