ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர், அரசாங்க தகவல் திணைக்கள பணிப்பாளர், அமைச்சரவை பேச்சாளர் நியமனம்!

01 Oct, 2024 | 04:58 PM
image

(எம்.மனோசித்ரா)  

ஆட்சி மாற்றத்தோடு அரச நிறுவனங்களின் முக்கிய பதவிகள் சிலவற்றில் ஏற்பட்ட வெற்றிடங்களுக்கு புதிய அதிகாரிகளை நியமிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. அத்தோடு ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகர் நியமனத்துக்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.  

அரசியலமைப்பின் 41ஆவது உறுப்புரையின் (01) ஆம் உப உறுப்புரையில் அதிகாரமளிக்கப்பட்டதன்  பிரகாரம் அமைச்சரவையின் கருத்துக்களைக் கேட்டறிந்து தனது பணிக்குழாமினரை நியமிப்பதற்கான அதிகாரம் ஜனாதிபதிக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது.  

அதற்கமைய, கடந்த செப்டெம்பர் 24ஆம் திகதி  தொடக்கம் நடைமுறைக்கு வரும் வகையில் துமிந்த ஹூலங்கமுவ (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக) மற்றும் கலாநிதி. ஏ.ஏ.ஜே. பர்னாந்து (பொருளாதார விவகாரங்கள் மற்றும் நிதி தொடர்பான ஜனாதிபதி ஆலோசகராக) சேவை அடிப்படையில் நியமிப்பதற்கு அமைச்சரவை உடன்பாடு தெரிவித்துள்ளது. இவர்கள் எவ்வித கொடுப்பனவுகளும் அற்ற அதிகாரிகளாகவே நியமிக்கப்பட்டுள்ளதாக அமைச்சரவை பேச்சாளர் விஜித ஹேரத் தெரிவித்தார்.  

மேலும் அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகமாக அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் (நிர்வாகம்) பதவியில் பணிபுரிந்த இலங்கை நிர்வாக சேவை தரம் 1 அதிகாரியான எச்.எஸ்.கே.ஜே.பண்டாரவை உடனடியாக நடைமுறைக்கு வரும் வகையில் அரசாங்க தகவல் பணிப்பாளர் நாயகமாக முழுநேரப் பதில் கடமைக்கு நியமிப்பதற்காக ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

அமைச்சரவைப் பேச்சாளராக புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார விவகாரங்கள், தேசிய ஒருமைப்பாடு, சமூகப் பாதுகாப்பு மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் விஜித ஹேரத்தை  நியமிப்பதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

யானை சின்னத்தில் போட்டியிடும் இ.தொ.கா: வெளியானது...

2024-10-08 23:45:49
news-image

மத்திய கிழக்கு போர் சூழலால் இலங்கையில்...

2024-10-08 17:09:54
news-image

உள்நாட்டு விவசாயிகளின் நலன் கருதியே இறக்குமதி...

2024-10-08 17:11:01
news-image

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து புதிய...

2024-10-08 17:09:23
news-image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை முருகன்...

2024-10-08 21:08:36
news-image

தபால்மூல வாக்களிப்புக்கான விண்ணப்ப முடிவு திகதி...

2024-10-08 21:01:37
news-image

பலத்த மின்னல் தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம்...

2024-10-08 19:34:32
news-image

முள்ளிவாய்க்காலில் விடுதலைப்புலிகளின் ஆயுதங்கள் தேடி அகழ்வுப்...

2024-10-08 18:55:58
news-image

பாராளுமன்றத் தேர்தல் ; வேட்பாளர்களைத் தெரிவு...

2024-10-08 17:28:25
news-image

சீன இராணுவ பாய்மரக் கப்பலுடன் கூட்டு...

2024-10-08 17:15:40
news-image

தேர்தல்கள் ஆணையாளர் நாயகத்திற்கும் யாழ். மாவட்ட...

2024-10-08 17:25:54
news-image

ஓடையில் தவறி வீழ்ந்து நான்கு வயது...

2024-10-08 17:56:10