சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உடல் நலக் குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கிறார்.
செரிமான மண்டல பிரச்சனைக்காக அனுமதிக்கப்பட்டிருக்கும் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்க்கு வைத்திய நிபுணர்கள் நவீன பரிசோதனைகளை மேற்கொண்டு பாதிப்புகளை துல்லியமாக அவதானித்து, அதற்கேற்ற வகையில் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
அவர் விரைவில் குணமடைய வேண்டும் என தமிழக முதல்வர் மு. க. ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் மற்றும் திரையுலக பிரபலங்கள் சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்கள்.
இந்தத் தருணத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் தயாராகி எதிர்வரும் பத்தாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவிருக்கும் 'வேட்டையன்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் நாளை, ஒக்டோபர் இரண்டாம் திகதியன்று வெளியாகும் என படக் குழுவினர் பிரத்யேக புகைப்படத்தை வெளியிட்டு உற்சாகமாக அறிவித்துள்ளனர்.
இதனிடையே 'வேட்டையன்' படம் வெளியாகும் தருணத்தில் சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்திற்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டிருப்பதால் அவருடைய ரசிகர்கள் அவர் விரைவில் குணமடைய வேண்டும் என பிரார்த்தித்து வருகிறார்கள் என்பதும், அவர் தற்போது நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பின் போது அவருக்கு திடீரென செரிமான மண்டல பிரச்சனை ஏற்பட்டதால் அக்குழுவினர் படப்பிடிப்பை ரத்து செய்து இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM