ராம் சரண் நடிக்கும் 'கேம் சேஞ்சர்' படத்தின் முதல் பாடல் வெளியீடு

Published By: Digital Desk 2

01 Oct, 2024 | 04:54 PM
image

தமிழ் ரசிகர்களுக்கு நன்கு அறிமுகமான தெலுங்கின் முன்னணி நட்சத்திர நடிகரான ராம் சரண் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தில் இடம்பெற்ற 'ரா மச்சா மச்சா..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது.

பிரம்மாண்ட இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'கேம் சேஞ்சர்' எனும் திரைப்படத்தில் ராம் சரண், கியாரா அத்வானி, அஞ்சலி, சமுத்திரக்கனி, எஸ். ஜே. சூர்யா, ஸ்ரீகாந்த், சுனில் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். 

எஸ். திருநாவுக்கரசு ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு எஸ். தமன் இசையமைத்திருக்கிறார். 

அரசியல் கலந்த எக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேசன்ஸ் எனும் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் ராஜு , சிரீஷ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

எதிர்வரும் டிசம்பர் மாதம் இருபதாம் திகதியன்று உலகம் முழுவதும் பட மாளிகையில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தில் இடம் பெற்ற 'கிளாச மடக்கி இறக்குனா நானும் நீதான்..' எனத் தொடங்கும் முதல் பாடலும், பாடலுக்கான லிரிக்கல் வீடியோவும் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் எழுத, பின்னாடி பாடகர் நகாஸ் ஆசிஷ் பாடி இருக்கிறார். துள்ளல் இசையில் உருவான இந்தப் பாடலில் நாயகன் ராம் சரணின் நடன அசைவுகள், பாடல் வரிகள் ரசிகர்களுக்கு வெகுவாக பிடித்திருப்பதால், பெரும் வரவேற்பினை பெற்று வருகிறது. 

இந்தப் பாடல் வெளியான குறுகிய கால அவகாசத்திற்குள் மில்லியன் கணக்கிலான பார்வையாளர்களால் பார்வையிடப்பட்டு சாதனை படைத்து வருகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஷான் ரோல்டனின் இசையில் கவனம் ஈர்க்கும்...

2024-10-08 20:50:47
news-image

பிரைம் வீடியோவின் அசல் திரில்லர் இணைய...

2024-10-08 21:02:59
news-image

உலக சாதனை புத்தகத்தில் இடம் பிடித்த...

2024-10-08 16:43:22
news-image

அர்ஜுன் - ஜீவா இணையும் 'அகத்தியா'

2024-10-08 21:03:58
news-image

வைபவ் நடிக்கும் 'சென்னை சிட்டி கேங்ஸ்டர்ஸ்...

2024-10-08 21:04:37
news-image

கவின் நடிக்கும் 'பிளடி பெக்கர்' படத்தின்...

2024-10-08 21:05:23
news-image

சூர்யா நடிக்கும் 'சூர்யா 44' படத்தின்...

2024-10-07 17:48:00
news-image

துருவா சர்ஜா நடிக்கும் 'மார்டின்' பட...

2024-10-07 17:02:58
news-image

'மக்கள் நாயகன்' ராமராஜன் அறிமுகம் செய்து...

2024-10-07 15:05:07
news-image

அர்ஜுன் தாஸ் நடிக்கும் 'ஒன்ஸ்மோர்' படத்தின்...

2024-10-07 15:04:49
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் வருண்...

2024-10-07 15:04:26
news-image

நடிகர் ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின்...

2024-10-05 17:24:45