மட்டக்களப்பில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு சிறுவர்கள் பங்குகொண்ட கவனயீர்ப்பு போராட்டம்

01 Oct, 2024 | 01:30 PM
image

சர்வதேச சிறுவர் தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இன்று செவ்வாய்க்கிழமை (01) காலை நடைபெற்ற நிலையில்  சிறுவர்கள் பங்குகொண்ட கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  

காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் ஏற்பாட்டில் சிறுவர் தினத்தினை முன்னிட்டு இறுதி யுத்ததின்போது ஒப்படைக்கப்பட்ட சிறுவர்களுக்கான நீதி கோரி இந்த கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம்  மட்டக்களப்பு காந்தி பூங்கா முன்பாக  முன்னெடுக்கப்பட்டது.  

இராணுவத்தினரிடம் ஒப்படைக்கப்பட்ட எங்கள் பிள்ளைகளுக்கு இறப்பு சான்றிதழ்தான் பதில் என்றால் கொலைசெய்தவன் யார்?, பிள்ளைகளை தினம் தேடிக்கொண்டே இறந்துகொண்டு இருக்கின்றோம், கையளிக்கப்பட்ட சகோதரங்கள் எங்கே? என்கின்ற வாசகங்கள் அடங்கிய பதகைகளை ஏந்தியவாறு கவனயீர்ப்பை முன்னெடுத்தனர்.  

இக் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் உறவினர்கள் மற்றும் சிறுவர்கள் என பலரும் கலந்து கொண்டதுடன் 1\2 மணி நேரம் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டம் இடம்பெற்றது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

இன்றைய வானிலை

2025-03-18 06:13:34
news-image

'பூஜா பூமி' அபிவிருத்தி திட்டத்தின் கீழ்...

2025-03-18 04:13:02
news-image

காவியுடை அணிய தகுதியில்லாத ஒருசிலர் வடக்கில்...

2025-03-18 04:01:35
news-image

தமிழரசுக்கட்சியுடன் இணைந்து களமிறங்கவுள்ள முஸ்லிம் காங்ரஸ்

2025-03-18 03:53:38
news-image

முறையாக நடந்துகொள்ள தெரியாத ஒருவருக்கு நாங்கள்...

2025-03-18 03:48:50
news-image

8 வயதுக்குட்பட்ட அனைவரும் சிறுவர்கள் அவர்களுக்கு...

2025-03-18 02:50:14
news-image

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கத்தை புறக்கணிப்பது...

2025-03-18 02:44:35
news-image

மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிக்கு அமைய புதிய...

2025-03-18 02:36:35
news-image

சுவஸ்திகா அருள்லிங்கம் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்...

2025-03-17 15:27:32
news-image

முஸ்லிம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம்...

2025-03-17 22:16:32
news-image

உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் பிரதான...

2025-03-17 22:07:08
news-image

மகர சிறைச்சாலையில் மூடப்பட்டுள்ள பள்ளிவாசலை ,...

2025-03-17 22:10:24