நடிகர் ரஜினிகாந்த் நேற்று திங்கட்கிழமை (30) மாலை திடீரென்று உடல் நலக்குறைவு ஏற்பட்டு, சென்னை அப்போலோ வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரைப் பரிசோதித்த வைத்தியர்கள் வயிற்றுப் பகுதி இரத்த நாளத்தில் வீக்கம் இருப்பதாக கண்டறியப்பட்டதாகத் தெரிவித்துள்ளனர். இதையடுத்து, வைத்தியர்கள் சிகிச்சை அளித்து வருவதாகவும், அவரது உடல்நிலை சீராக இருப்பதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில், ரஜினிகாந்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை (01) ஆஞ்சியோகிராம் விட அதிநவீன அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்யப்படவுள்ளதாக வைத்தியக்குழு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
நடிகர் ரஜினிகாந்த் வேட்டையன் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் வரும் 10ம் திகதி திரைக்கு வர உள்ளது. இதனை தொடர்ந்து கூலி என்ற படத்திலும் ரஜினிகாந்த் நடித்து வருகிறார்.
இந்நிலையில், நடிகர் ரஜினிகாந்திற்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதுடன் லோகேஷ் கனகராஜ் இயக்கும் கூலி படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொண்டு வந்த நிலையில் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், ஏற்கனவே கடந்த 2020 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அப்போலோ வைத்தியசாலையில் நடிகர் ரஜினிகாந் சிகிச்சை பெற்றுள்ளதுடன் உடல்நலக்குறைவினால் அரசியலுக்கு வரும் முடிவையும் அப்போது கைவிட்டமை குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM