ஜப்பானில் முன்னிலை வகிக்கும் வர்ணப்பூச்சு நிறுவனம், இலங்கையில் உள்ள இல்லங்களுக்கு அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துடன் காத்திரமான வர்ணப்பூச்சு வகைகளை அறிமுகப்படுத்தியுள்ளது.

ஜப்பான் நாட்டின் Kansai Paints Ltd நிறுவனம், அண்மையில் இரத்மலானையில் அமைந்துள்ள ஸ்டைன் ஸ்டூடியோவில் ஏராளமான ஆர்வலர்கள் மற்றும் கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு மத்தியில் புதிய வர்ணப்பூச்சு உற்பத்திகளை இலங்கையில் அறிமுகம் செய்து வைத்துள்ளது.

நாடளாவியரீதியில் Kansai வர்ணப்பூச்சுக்களை விநியோகம் செய்வதற்கு வலுவான விநியோக மார்க்கம் ஒன்றை ஸ்தாபிக்கும் முயற்சியுடன் சேர்த்து, கொக்கல என்ற இடத்தில் ஒரு புதிய உற்பத்தி நிலையத்தை அமைப்பதற்கான திட்டங்களும் இங்கு முன்வைக்கப்பட்டன.

சர்வதேச அளவில் பெரும் நிறுவனங்களுள் ஒன்றான Kansai, கெப்பிட்டல் மகராஜா நிறுவனத்துடன் (The Capital Maharaja Organisation Limited) பங்காளராக இணைந்து, கொக்கல என்ற இடத்தில் அதிநவீன உற்பத்தி ஆற்றல்களுடன், Kansai Paints Lanka (Pvt) Ltd நிறுவனத்தை ஸ்தாபித்துள்ளது. The Capital Maharaja Organisation Ltd நிறுவனத்தின் பணிப்பாளர் சபைத் தலைவரும், முகாமைத்துவப் பணிப்பாளருமான ஆர். ராஜமகேந்திரன், ஜப்பான் Kansai நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவின் தலைமை அதிகாரியும், நிறைவேற்றுச் சபை உறுப்பினருமான கட்சுகிகோ கட்டோ, முதலீட்டு ஊக்குவிப்புச் சபையின் பணிப்பாளர் சபைத் தலைவரான உபுல் ஜெயசூரிய, இந்தியாவின் Kansai Nerolac> The Capital Maharaja Organisation மற்றும் Kansai Paints Lanka (Pvt) Ltd ஆகிய நிறுவனங்களின் பணிப்பாளர் சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலரும் இதன் அங்குரார்ப்பண நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.

வர்ணப்பூச்சின் அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தி வைத்த ஜப்பான் Kansai நிறுவனத்தின் சர்வதேச வர்த்தகப் பிரிவிற்கான தலைமை அதிகாரியும், நிறைவேற்றுச் சபை உறுப்பினருமான கட்சுகிகோ கட்டோ அவர்கள் நிகழ்வில் உரையாற்றுகையில்,

“இலங்கையில் வர்ணப்பூச்சு சந்தையில் உண்மையான மாற்றத்தை கொண்டுவருவதற்காகவே நாம் இதனை அறிமுகப்படுத்தியுள்ளோம். இலங்கை மக்கள் தமது பொருளாதாரம் வளர்ச்சியடைவதையும், வாழ்க்கை முறை மற்றும் அபிலாஷைகள் மேம்பட்டு வருவதையும் கண்ணுற்றுள்ளனர். ஆகவே, உங்களுடைய வர்ணப்பூச்சு தேவைப்பாடுகளை தீர்த்து வைப்பதற்குரூபவ் அடுத்த தலைமுறை ஜப்பானிய தொழில்நுட்பத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தியுள்ளோம்” என்று குறிப்பிட்டார்.

“இலங்கை காலநிலையின் வெப்பமண்டல இயல்பினை நாம் கருத்தில் எடுத்துள்ளோம். அதனால் வெளிப்புற சுவர்களில் ஏற்படுகின்ற மாற்றங்களை ஈடுசெய்வதற்காக, உயர் தொழில்நுட்பத்துடனான, தண்ணீரை உட்புகவிடாத வர்ணப்பூச்சுக்களை உபயோகித்து, மைக்கா மாபிள் (Mica Marble) முடிவு வேலைப்பாடு கொண்ட வெளிப்புற வர்ணப்பூச்சுக்களை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம்.” என்று தொடர்ந்தும் அவர் குறிப்பிட்டார்.

அவர் தொடர்ந்தும் கூறுகையில், “சுத்தமான பசுமைச் சூழல் மற்றும் இல்லம் ஆகியவற்றை இலங்கை மக்கள் எந்த அளவிற்கு மதிக்கின்றனர் என்பதை அறிந்துள்ள நாம், கிட்டத்தட்ட ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOC) அற்ற, ஈயக் கலப்பற்ற, சுற்றுச்சூழலுக்கு தீங்கினை விளைவிக்காத வர்ணப்பூச்சுக்களை வழங்குகின்றோம். மிகவும் குறைந்த அளவில் ஆவியாகும் கரிம சேர்மங்களை (VOC)கொண்டுள்ளன. Kansai வர்ணப்பூச்சுக்கள்வையாக உள்ளதுடன், பாதுகாப்பான, ஒரு தெரிவாக உள்ளன.

சுற்றுச்சூழலை ஆரோக்கியமாகவும், சுத்தமாகவும் பேண உதவுகின்ற வகையில் குறைந்த அளவில் மணம் கொண்ட வர்ணப்பூச்சு வகைகளாக இவை உள்ளன. பிரகாசமான, உறுதியான மற்றும் ஆரோக்கியமான ஜப்பானின் அடுத்த தலைமுறை வர்ணப்பூச்சுக்களை இலங்கையிலுள்ள இல்லங்களுக்கு அறிமுகம் செய்வதையிட்டு மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம்.” என்று குறிப்பிட்டார்.

உயர் வரைவிலக்கண முடிவு வேலைப்பாடு (High-definition) வர்ணங்கள் இவற்றின் மற்றுமொரு சிறப்பம்சமாகும். சுற்றுச்சூழலுக்கு தீங்கிளைக்காத வகையில், உயர்ந்த ஆற்றலுடன், அதிக உயிரோட்டம் கொண்ட வர்ணங்களை, பிரகாசமான தோற்றத்துடன் வழங்குவதற்காக வர்ணத்துடன் ஒரு விசேட உட்சேர்க்கைப் பொருளான micro embedded brightness boosters (MEBB) சேர்க்கப்பட்டே Kansai வர்ணப்பூச்சுக்கள் தயாரிக்கப்படுகின்றன. அது உண்மையான ஒரு உயர் முடிவு வேலைப்பாட்டைத் தருகின்றது.

ஒரு தனித்துவமான வெளிப்புற வர்ணப்பூச்சான மைக்கா (Excel mica)மற்றும் பளிங்கு (marble), அதிசிறந்த பலனைத் தருகின்றது. mica தட்டுக்கள் தண்ணீரை உட்புகவிடாத ஒரு பொருளாகச் செயற்படுவதால், சுவர்களை உறுதியாக்க உதவுகின்றன. marble ஊக்குவிப்பான்கள் நீண்ட காலத்திற்கு நீடித்து உழைக்கும் அதிசிறந்த பிரகாசத்தைத் தருகின்றன.

Kansai வர்ணப்பூச்சுக்கள் - விபரம்

Kansai வர்ணப்பூச்சுக்கள், இன்று ஜப்பானில் முதற்தர வர்ணப்பூச்சு வர்த்தகநாமமாகத் திகழ்வதுடன், உலகில் முதல் 5 இடங்களில் உள்ள வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு வர்த்தகநாமங்களில் ஒன்றாகவும் திகழ்ந்து வருகின்றன. தொழிற்துறையில் புதிய தொழில்நுட்பங்களை அறிமுகப்படுத்துவதில் Kansai வர்ணப்பூச்சுக்கள் முன்னோடி ஸ்தானத்தை வகித்து வருகின்றன.

Kansai வர்ணப்பூச்சுக்கள் 1918 ஆம் ஆண்டில் ஜப்பானில் அறிமுகம் செய்யப்பட்டிருந்தன. 1926 ஆம் ஆண்டில் ஜப்பானில் முதல் முறையாக ‘CELVA’ என்ற அரக்கு உலோக (lacquer) அடிப்படையிலான வர்ணப்பூச்சை அறிமுகப்படுத்தியதில் Kansai வர்ணப்பூச்சுக்கள் முன்னோடியாகச் செயற்பட்டிருந்தன. அத்தகைய புதிய உற்பத்திகளின் மூலமாக, Kansai வர்ணப்பூச்சுக்கள் வெகுவிரைவாக ஜப்பானின் முதற்தர வர்ணப்பூச்சுக்களாக வளர்ச்சி கண்டுள்ளதுடன், தனது தொழிற்பாடுகளை ஏனைய பல்வேறுபட்ட பிராந்தியங்களுக்கும் விஸ்தரித்துள்ளன.

இன்று உலக அளவில் வலுவாக ஸ்தாபிக்கப்பட்டுள்ள உற்பத்தி, விநியோகம் மற்றும் சந்தைப்படுத்தல் செயற்பாடுகளுடன், உலகெங்கிலும், அதியுயர் தரம் கொண்ட உற்பத்திகளை Kansai வர்ணப்பூச்சுக்கள் வழங்கிவருகின்றன.

ஜப்பான், சீனா, தாய்லாந்து, சிங்கப்பூர், மலேசியா, தாய்வான், ஹொங்கொங், பிலிப்பைன்ஸ் மற்றும் இந்தியா ஆகிய நாடுகளில் Kansai வர்ணப்பூச்சுக்கள் தமது உற்பத்தி மற்றும் விநியோக வசதிகளைக் கொண்டுள்ளதுடன், அங்கு உள்நாட்டுச் சந்தைகளின் தேவைகளை ஈடுசெய்து வருகின்றன.

மேலும், ஐக்கிய அமெரிக்கா, மெக்சிகோ உள்ளிட்ட வட அமெரிக்க பிராந்தியங்கள், ஐரோப்பா மற்றும் மத்திய கிழக்கு போன்ற பிராந்தியங்களிலும் Kansai வர்ணப்பூச்சுக்கள் கிடைக்கப்பெறுகின்றன.

தொழில்நுட்பரீதியாக மேம்பட்ட சமுத்திர மற்றும் மோட்டார் வாகன தொழிற்துறைகளில் Kansai வர்ணப்பூச்சுக்கள் பிரசன்னமாகியுள்ளமை அதன் தொடர்ச்சியான புத்தாக்கம் மற்றும் ஆராய்ச்சி மற்றும் அபிவிருத்தி மீதான தீராத அர்ப்பணிப்பு ஆகியவற்றிற்கு சான்றாக அமைந்துள்ளது.