(எம்.ஆர்.எம்.வசீம்)
எனது சகோதரரின் பெயருக்கு மதுபானசாலை இருந்தால், சட்ட ரீதியிலான எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள நான் தயார். வசந்த சமரசிங்கவின் இந்த பொய்க் குற்றச்சாட்டுக்கு எதிராக சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன் என முன்னாள் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ் தெரிவித்தார்.
கதிர்காமத்தில் திறக்கப்பட்டிருக்கும் மதுபானசாலைக்கும் எனக்கும் தொடர்பு இருப்பதாக தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினர் வசந்த சமரசிங்க தெரிவித்து வரும் குற்றச்சாட்டு தொடர்பில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
எனது நடவடிக்கைகள் செயற்பாடுகள் தொடர்பில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நன்கு அறிவார். ஆனால் என்னைப்பற்றி தெரியாத, தேசிய மக்கள் சக்தியின் அரசியல் சபை உறுப்பினரான வசந்த சமரசிங்க, கதிர்காமத்தில் திறக்கப்பட்டிருக்கும் மதுபானசாலை தொடர்பில் பொய் பிரசாரம் மேற்கொண்டு வருகிறார். ஊடக சந்திப்பொன்றை நடத்தி அவர் தெரிவிக்கும்போது, பிரதி சபாநாயகரின் சகோதரரின் பெயரில் மதுபானசாலை இருப்பதாகவும் அந்த மதுபானசாலைக்கும் எனக்கும் உள்ள தொடர்பு என்ன என்பது தொடர்பான தகவல் இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
வசந்த சமரசிங்க ஊடக சந்திப்பு நடத்தி நகைச்சுவை கதைகளை தெரிவிக்காமல் முடியுமானால், குறித்த மதுபானசாலைக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை வெளிப்படுத்த வேண்டும். எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் அவர் தெரிவித்த விடயங்களுக்கு எதிராக நான் சட்ட ரீதியில் நடவடிக்கை எடுக்க இருக்கிறேன்.
எனது சகோதரரின் பெயருக்கு மதுபானசாலை இருந்தால், சட்ட ரீதியிலான எந்த தண்டனையையும் ஏற்றுக்கொள்ள நான் தயார். சட்டம். பாதுகாப்பு, புலனாய்வுத்துறை என அனைத்தும் தற்போது அவர்களின் கைகளிலேயே இருக்கின்றன. அதனால் குறித்த மதுபானசாலைக்கும் எனக்கும் இருக்கும் தொடர்பை தேடிப்பார்த்து முடியுமானால் ஒப்புவிக்கட்டும் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM