(நெவில் அன்தனி)
இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட 19 வயதுக்குட்பட்ட அகில இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் விருது விழாவில் மஹிந்த கல்லூரியின் தினுர கலுபஹன 2024க்கான அதிசிறந்த பாடசாலைகள் கிரிக்கெட் வீரராகவும் கம்பஹா ரத்னாவலி மகளிர் வித்தியாலயத்தின் விஷ்மி குணரட்ன 2024க்கான அதிசிறந்த பாடசாலைகள் கிரிக்கெட் வீராங்கனையாகவும் தெரிவாகி விருதுகளை வென்றெடுத்தனர்.
இவ் விருது விழாவில் அதிசிறந்த களத்தடுப்பாளர் விருது கொட்டாஞ்சேனை ஆசீர்வாதப்பர் கல்லூரி அணித் தலைவரும் விக்கெட்காப்பாளருமான சண்முகநாதன் ஷாருஜனுக்கு வழங்கப்பட்டது.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத் தலைவர் ஷம்மி சில்வா (பிரதம அதிதி), இலங்கை வீரர் மதீஷ பத்திரண (சிறப்பு அதிதி) ஆகியோரிடமிருந்து தனது விருதை தினுர கலுபஹான பெற்றுக்கொண்டார்.
ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலக்க கிண்ண கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணிக்காக விளையாடும் விஷ்மி குணரட்னவின் விருதை அவரது சார்பில் அவரது தந்தை பெற்றுக்கொண்டார்.
அதிசிறந்த பாடாசலைகள் கிரிக்கெட் வீராங்கனைக்கான விருதை விஷ்மி குணரட்ன வென்றெடுத்தது இது மூன்றாவது தொடர்ச்சியான தடவையாகும்.
அதிசிறந்த துடுப்பாட்ட வீரராக கண்டி தர்மராஜ கல்லூரியின் புலிந்து பெரேராவும் அதிசிறந்த பந்துவீச்சாளராக பாணந்துறை ஸ்ரீ சுமங்கல கல்லூரியின் விஷ்வா லஹிருவும் தெரிவாகி விருதுகளை வென்றெடுத்தனர்.
தினுர கலுபஹன அதிசிறந்த சகலதுறை வீரர் விருதையும் வென்றெடுத்தார்.
பெண்கள் பிரிவில் அதிசிறந்த துடுப்பாட்ட வீராங்கனையாக விஷ்மி குணரட்னவும் அதிசிறந்த பந்துவீச்சாளராக தேவபத்திராஜ வீராங்கனை ஷஷினி கிம்ஹானி, அதிசிறந்த சகலதுறை வீராங்கனை மற்றும் அதிசிறந்த களத்தடுப்பாளர் ஆகிய விருதுகளை மொறட்டுவை பிறின்சஸ் ஒவ் வேல்ஸ் கல்லூரியின் மனுதி நாணயக்காரவும் வென்றெடுத்தனர்.
இந்த விருதுகளுடன் மொத்தமாக 109 விருதுகள் வழங்கப்பட்டன.
ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் பதில் செயலாளர் கிறிஷான்த கப்புவத்த, உதவித் தலைவர் ரவின் விக்ரமரட்ன, பிரதம நிறைவேற்று அதிகாரி ஏஷ்லி டி சில்வா, விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் கே. மஹேசன், கல்வி அமைச்சின் மேலதிக செயலளார் குமாரி பிரின்சிலா, கல்வி அமைச்சின் விளையாட்டுத்துறை பணிப்பாளர் அனுர அபேவிக்ரம, இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத் தலைவர் திலக் வத்துஹேவ ஆகியோரும் விசேட அதிதிகளாகக் கலந்து கொண்டு பரிசில்களை வழங்கினர்.
இதேவேளை, மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் மற்றும் அவுஸ்திரேலியாவில் நடைபெற்றுவரும் 19 வயதுக்குட்பட்ட மகளிர் மும்முனை கிரிக்கெட் ஆகிய போட்டிகளில் பங்குபற்றும் இலங்கை குழாம்களில் இடம்பெறும் விஷ்மி குணரட்ன, சச்சினி கிம்ஹானி, மனுதி நாணயக்கார, ஷெஹாரா இந்துவரி, சமுதி நிசன்சலா, ப்ரசாதி மெத்சரா, ரஷ்மிக்கா செவ்வந்தி ஆகியோருக்கான விருதுகனை அவர்களது குடும்பத்தினர் பெற்றுக்கொண்டனர்.
அணிநிலை விருதுகள்
19 வயதின் கீழ் இரண்டாம் பிரிவு பி அடுக்கு
சம்பியன்: திம்பிரிகஸ்கட்டுவ மாரிஸ் ஸ்டெல்லா
2ஆம் இடம்: பாணந்துறை றோயல்
19 வயதின் கீழ் இரண்டாம் பிரிவு ஏ அடுக்கு
சம்பியன்: பாணந்துறை ஸ்ரீ சுமங்கல
2ஆம் இடம்: களுத்துறை திஸ்ஸ மத்திய கல்லூரி
19 வயதின் கீழ் முதலாம் பிரிவு பி அடுக்கு
சம்பியன்: பம்பலப்பிட்டி புனித பேதுருவானவர்
2ஆம் இடம்: கொழும்பு லும்பினி
19 வயதின் கீழ் முதலாம் பிரிவு ஏ அடுக்கு
சம்பியன்: காலி றிச்மண்ட்
2ஆம் இடம்: கண்டி திரித்துவம்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM