மேஷம்
மனவலிமையும், துணிச்சலும் கொண்டு விளங்கும் மேஷ ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் முயற்சியின் ஸ்தானத்தில் அமர்ந்து பாக்கியஸ்தானத்தை பார்ப்பது சிறப்பான நற்பலன்களை பெற்று தரும். குருவின் பார்வைபடும் இடங்களும், அமர்ந்த ஸ்தானமும் தனஸ்தானம் என்பதால் குரு பார்க்க கோடி நன்மை உண்டாகும்.
சுகஸ்தானாதிபதி சந்திரன் பூர்வ புண்ணியஸ்தானத்தில் அமர்ந்து லாபஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் தன்னிறைவு பெறுவீர்கள். சுக்கிரன் ஆட்சி பெற்று, ராசியை பார்வையிடுவது உங்களின் தொழில் முன்னேற்றத்தில் ஏற்பட்ட பல விதமான பின்னடைவை சந்திக்க வேண்டிவரும் என்பதால் சற்று கவனமுடன் இருப்பது நல்லது. பாதியில் நின்ற காரியம் தொடர்ந்து செயல்பட துவங்கும்.
மெதுவாக சென்ற உங்களின் போக்கு விரைவில் நினைத்ததை அடைய வைக்கும். உங்களின் சனி லாபஸ்தானத்தில் அமர்ந்து உங்களின் ராசியை பார்ப்பது சுறுசுறுப்பையும், உலக அனுபவத்தையும் தந்து சிறப்பான மேன்மையை அடைவீர்கள். போட்டிகளை தவிர்த்து திறந்த மனப்பான்மையுடன் செயல்படுவதன் மூலம் காரிய அனுகூலத்தை பெறுவீர்கள்.
கலைத்துறையினருக்கு புதிய வாய்ப்பு வந்து உற்சாகம் பெறுவீர்கள். நல்ல நண்பர்களின் சேர்க்கை மூலம் சில காரியங்களை சாதகமாக்கி கொள்வீர்கள். சிலருக்கு பதவி உயர்வு கிடைத்து, இடமாற்றம் பெறுவீர்கள். விளையாட்டு துறையினருக்கு போட்டியில் நிறைய சாதனை செய்வீர்கள்.
பொது வாழ்வில் சிலருக்கு நன்மதிப்பு கிடைக்க பெறுவீர்கள். உடல் நலனில் நல்ல மாற்றம் உண்டாகும். செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள். எதையும் முன் கூட்டியே செய்து கொள்ள நினைப்பீர்கள். பொருளாதாரம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
06-10-2024 ஞாயிறு மாலை 04.36 முதல் 08-10-2024 செவ்வாய் இரவு 01.34 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை வைரவரை வணங்கி மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வணங்கி விட்டு, செவ்வாய்கிழமை சுப்ரமணியரை வழங்கி வர, சகல காரியமும் வெற்றியை தரும்.
ரிஷபம்
உங்களுக்கு மதிப்பு தருபவரை நேசித்து வணங்கும் ரிஷப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபாதிபதி குரு ராசியில் அமர்ந்தும் விரையாதிபதி தனஸ்தானத்திலே அமர்வதும் உங்களின் பொருளாதார மேன்மை சிறப்பாக அமையும். கொடுத்து வைத்து இடத்திலிருந்து விரைவில் பணம் வந்து சேரும். உங்களின் ராசிநாதன் சத்ரு ஸ்தானத்தில் ஆட்சி பெறுவது நீங்கள் எடுக்கும் காரியங்களுக்கு எதிர்ப்புகள் விலகி நன்மை உண்டாகும்.
அரசியலில் உங்களின் சுயசெல்வாக்கு மேன்மை உண்டாகும். உங்களின் திறமையும் செயல்பாடுகளின் மூலம் முன்னேற்றம் காண்பீர்கள். உங்களின் உத்தியோகத்தில் சிலருக்கு விரைவில் பதவி உயர்வு கிடைக்கும். பாதுகாப்பு பணியில் இருப்பவருக்கு விரும்பிய இடத்திற்கு இடமாற்றம் கிடைக்கும்.
பொது வாழ்வில் இருப்பவருக்கு சில நேரம் அலைச்சலும், இருக்குமிடத்தில் வளர்ச்சியையும் பெறுவீர்கள். தேவையற்ற சில விடயங்களிலிருந்து உங்களை விடுவித்து கொள்வீர்கள். சாதிக்க நினைத்த காரியம் தாமதமானாலும் விரைவில் உங்களுக்கு சாதகமாக அமையும். மாணவருக்கு கல்வியில் சில தடைகள் வந்து பின்பு சரியாகும்.
உயர் பதவியில் இருக்கும் அதிகாரிகளின் நட்பு சிலருக்கு கிடைக்கும். கலைதுறையினருக்கு நல்ல வருமானமும், தொழிலில் முன்னேற்றமும் உண்டாகும். அடிக்கடி நிகழ்ச்சிகளின் ஒத்திகை நடக்கும். அதில் நிறைய புதிய யுக்திகளை பற்றி அறிந்து கொள்வீர்கள்.
பெண்களின் வாழ்க்கையில் முன்னேற்றம் உண்டாகும். வங்கி மூலம் கடன் வாங்கி தொழில் செய்யும் வாய்ப்பைப் பெறுவீர்கள். எதிலும் முன் எச்சரிக்கையுடன் செயல்படுவதும் நல்லது. இனிவரும் காலங்களில் திட்டமிட்டு செயல்படுவது உங்களுக்கு நல்லது.
சந்திராஷ்டம நாட்கள்:
08-10-2024 செவ்வாய் இரவு 01.35 முதல் 11-10-2024 வெள்ளிகிழமை காலை 08.04 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ஓரஞ்சு, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமையன்று பைரவருக்கு 3 தீபம் ஏற்றி, நீல நிற வஸ்திரத்தை சாற்றி, உங்களின் வேண்டுதல் சொல்லி வர. உங்களின் எண்ணம் போல வாழ்க்கை அமையும்.
மிதுனம்
கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் மிதுன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் சுகஸ்தானத்தில் அமர்ந்து தொழில் ஸ்தானத்தை பார்ப்பதும், லாபாதிபதி செவ்வாய் ராசியிலும் அமர்ந்திருப்பதும் உங்களின் நிலையான தொழில் வாய்ப்புகள் அமையப் பெறுவீர்கள். முயற்சி ஸ்தானத்தில் தன காரகன் சந்திரன் அமர்ந்து பாக்கிய ஸ்தானத்தை பார்ப்பதால் பொருளாதாரத்தில் செலவுகள் இருந்தாலும், அதனை சரிசெய்ய வருமானத்தை பெற்று தருவார்.
வியைய குரு புதிய செலவு செய்து வைத்து, பொருளாதாரத்தில் தடையை ஏற்படுத்தினாலும், உங்களின் ராசிநாதன் உச்சம் பெற்றிருப்பதால் ஏதாவது வழியில் பணப்புழக்கம் இருக்கும். மன ரீதியான பிரச்சனைகளிலிருந்து படிபடியாக முன்னேற்றம் காண்பீர்கள். முக்கிய பிரமுகரின் சந்திப்பால் நீங்கள் எதிர்பார்த்த சில காரியங்கள் சிறப்பாக அமையும்.
வெளியூர் பயணம் நல்ல முன்னேற்றத்தை தரும். காத்திருந்த பல காரியம் நிலுவையிலிருந்தாலும் இனி படிபடியாக செயல்படதுவங்கும். அரசியலில் அதிக விருப்பம் இல்லை என்றாலும், உங்களின் நண்பர்களுக்கு சில உதவிகளை செய்து தருவீர்கள். கலைத்துறையினருக்கு கலை நயமும், செயலில் மன துணிவும் கொண்டு விளங்குவார்கள். இதனால் நீங்கள் பல நிகழ்ச்சிகளில் திறம்பட செயல்படுவீர்கள். எதையும் மகிழ்ச்சியுடன் செய்வீர்கள். புதிய தொழில் சார்ந்த திட்டத்தை.. சில காலம் தள்ளி போடுவது நல்லது. எதற்கு அஞ்சாமல் துணிவுடன் செயல்படுவீர்கள்.
காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் உடனே எல்லா விதமான காரியங்களையும் சிறப்பாக செய்வீர்கள். மாணவர்களின் படிப்பில் நல்ல வளர்ச்சியும், திறமையும் வெளிபடும். பெண்களின் கூட்டு தொழில் சிறப்பாக அமையும். சுயதொழில் சில நேரங்களில் கஷ்டமாக அமையும். பணம் புரளும்.
சந்திராஷ்டம நாட்கள்:
11-10-2024 வெள்ளி காலை 08.05 முதல் 13-10-2024 ஞாயிறு பகல் 12.22 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, சிவப்பு, நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்மேற்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வெள்ளி. சனி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் விநாயகர் வழிபாடும், வெள்ளெருக்கு பூ மாலை அணிவித்து, அவல், பொரி, சர்க்கரை கலந்து நைவேத்தியம் செய்து தர, சகல காரியமும் வெற்றியும், பண வரவும் உண்டாகும்.
கடகம்
காலத்திற்கு தகுந்தபடி தங்களை மாற்றிக்கொள்ளும் கடக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு லாபஸ்தானத்தில் குருவும், தன ஸ்தானத்தில் ராசிநாதன் சந்திரனும் அமர்ந்து கூட்டு ஸ்தானத்தை பார்ப்பதால் கூட்டு தொழில் மூலம் லாபம் கிடைக்கும். ஓன்லைன் வர்த்தகத்தில் ஈடுபடலாம். அட்டம சனியாக இருந்தாலும் சனி தற்சமயம் வக்கிரகதியில் இருப்பதால் நல்ல முன்னேற்ற பாதைகளை அளிப்பார். தடை நீங்கி வளர்ச்சியை மேலோங்க செய்யும்.
எதிரிகளிடமிருந்து சிலருக்கு விடுதலை கிடைக்கும், உடல்நலனில் கவனம் செலுத்தவேண்டியதிருக்கும். நோய் எதிர்ப்பு சக்தி விடயத்தில் கூடுதுல் கவனம் தேவைபடும். சிலருக்கு வளமான வாழ்க்கை சூழ்நிலை உருவாகும். சுகஸ்தானத்தில் சுக்கிரன் அமர்ந்து ஆட்சி பெறுவதால்.. தனி திறமைகளை மென்மேலும் வளர்த்து கொள்வீர்கள். புதிய சகாப்தம் உருவாக காரணமாவீர்கள்.
பொது நலன் கருதி நீங்கள் மக்களுக்காக செயல்படும் செயலையும் ஊக்கபடுத்தும். எதிர்கால நலன் கருதி சில காரியங்களை முன் ஏற்பாடு செய்து செய்து கொள்வீர்கள். முக்கியமான சில விடயங்களை முடிவு எடுக்கும் முன்பு சில ஆய்வுகளுக்கு உட்படுத்தி செயல்படுவது நல்லது. குரு சாதகமான சூழ்நிலையில் மூன்றாமிட பார்வையாக பார்ப்பது தைரியத்தையும், துணிச்சலை செய்ய கூடியது.
நினைத்ததை அடைய சகல விதமான முயற்சிகளும் கைகூடும். ஐந்தாமிட குரு பார்வையால் பூர்வ புண்ணிய பலன்களை அடைவீர்கள். பூர்வீக சொத்து சம்மந்தமான பிரச்சனைகள் நல்ல முடிவை எடுக்கும் சூழ்நிலை உருவாகும். கலைத்துறை பணியில் நல்ல தொகுப்பாளர்களுக்கு வாய்ப்பு அமையும்.
நாட்டிய கலை, நடனம் போன்ற பிரபலமான கலையில் சிறப்பாக செயல்பட்டு, பாராட்டு பெறுவீர்கள். காலத்தை கடந்த சில பணிகளால் சங்கடமான சூழ்நிலை மறைந்து நன்மை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் நீங்களே தொடர்ந்து சுறுசுறுப்புடன் செயல்பாடு நன்மை அடைவீர்கள். பணபுழக்கம் நன்றாக இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
13-10-2024 ஞாயிறு பகல் 12.23 முதல் 15-10-2024 செவ்வாய் மாலை 03.17 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, மஞ்சள், நீலம்.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, வடமேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
திங்கள், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை அன்று ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, அரளி பூ மாலை சாற்றி, விளக்கு முன் வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
சிம்மம்
ஆர்வமும், கொள்கை பிடிப்பும் கொண்டு விளங்கும் சிம்ம ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் தனஸ்தானதிபதியுடன் இணைவு பெறுவதும், தனஸ்தானத்தை குரு பார்ப்பதும், செய்யும் தொழில் மேன்மையுடன் நல்ல வளர்ச்சியும் கொண்டு விளங்குவீர்கள். முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு உங்களின் வேலைகளை சீராக செய்து நல்ல பலனை அடைவீர்கள்.
குழந்தை செல்வம் இல்லாதவருக்கு அமையும் வாய்ப்புகள் உண்டாகும். எதிர்கால திட்டங்கள் மேலும் விருத்தி தரும். புதிய முயற்சிகளின் மூலம் உங்களின் தொழிலை மேன்மைபடுத்தி கொள்வீர்கள். ஏழாமிடத்தில் சனி அமர்ந்து ராசியை பார்ப்பது இம்மாதம் முழுவதும் வக்கிரகதியில் இருப்பதால் கணவன் - மனைவி உறவுகளில் நல்ல சூழல் அமையும். நண்பர்களின் உதவியும் தடையின்றி கிடைக்கும்.
வெளிநாடு பயணம் மேற்கொள்வதை இம்மாதம் தவிர்ப்பது நல்லது. திருமண நிகழ்ச்சிகளில் நீங்கள் கலந்து கொண்டு உங்களின் தலைமை பண்பு வளம் பெறுவதுடன், உங்களின் தனிபட்ட பேச்சு திறன் சிறப்பாக அமையும். கடவுள் நம்பிக்கை உண்டாகும். குடும்ப ஒற்றுமையும், உறவினர்களின் முன்னேற்றமும் உண்டு. இதற்காக நீங்கள் உங்களாலான உதவிகளை செய்வீர்கள்.
ஆர்வமுடன் உங்களுடன் சிலர் வந்து, உங்கள் மூலமாக உதவிகளை பெற்று பயன் பெறுவார்கள். கலைத்துறையினர் அரங்கேற்ற நிகழ்ச்சி சிறப்பாக அமையும். அனைவரின் பாராட்டுதல்களையும் பெற்று, வளம் பெறுவீர்கள். கல்வி தரம் மாணவர்களுக்கு நல்ல முன்னேற்றம் தரும்.
செய்யும் தொழிலை மதித்து நடப்பீர்கள். எதை பற்றியும் கவலைபடாமல் தொடர்ந்து உங்களின் கடமைகளை செய்வீர்கள். உடல் நலனில் நல்ல படியாக முன்னேற்றம் உண்டாகும். மூத்த சகோதர ஸ்தானத்தில் செவ்வாய் சிறப்பான பலன்களை தருவார். பணபுழக்கம் இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
15-10-2024 செவ்வாய் மாலை 03.18 முதல் 17-10-2024 வியாழன் மாலை 06.37 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
சிவப்பு, வெண்மை, பச்சை.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தெற்கு, தென்கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
ஞாயிறு, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
திங்கள் கிழமைகளில் சிவாலயம் சென்று, சிவபெருமானுக்கு வில்வ இலை அர்ச்சனை செய்து வழிபாடு செய்து வேண்டிக் கொள்ள சகல காரியமும் வெற்றியை தரும்.
கன்னி
கனவுகளை நனவாக்க காரியங்களை துரிதபடுத்த எண்ணும் கன்னி ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆட்சி, உச்சம் பெறுவதும் குரு பார்வை பெறுவதும் சிறப்பான நற்பலன்களைப் பெற்று தரும். தன ஸ்தானதிபதி ஆட்சி பெற்று அமைவதால் தொடர்ந்து வெற்றி பாதையில் செயல்பட உதவியாக அமையும். உங்களுக்கு தொழில் போட்டியாக இருந்த நிலை மாறி, உங்கள் காரியங்களில் சகஜமான நிலை உருவாகும்.
புதிய முயற்சிகளில் உங்களின் விரைவான செயல்பாடுகள் மூலம் செய்யும் தொழிலை மேன்மைபடுத்திக் கொள்வீர்கள். சரியான முடிவு எடுக்கும் போது எதிலும் வெற்றியை பெற்று தரும். சிலருக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் கிடைக்கும். ஆரம்ப கட்டத்தில் உங்களுக்கு உணர்த்தும் விதமாக சில வித காரியங்களில் தடை உண்டானாலும் அதன் மூலம் சில அனுபவத்தை பெறுவீர்கள்.
முதலீடு இல்லாத தொழிலில் அறிவை பயன்படுத்தி வருமானம் ஈட்டும் வழிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். சிறந்த மருத்துவர்களுக்கு நோயாளிகளின் அதிக வருகையால் வருமானம் உயரும். குடும்ப ஒற்றுமையும், கணவன் - மனைவி உறவு சிலருக்கு சிறப்பாக அமையும்.
கலைதுறை அன்பர்களுக்கு நினைத்தபடி நிகழ்ச்சிகளை செய்து முடிப்பதும் செயல்பாடுகளில் உறுதி தன்மையும் உண்டாகப் பெறுவீர்கள். அரசியலிலும், ஆன்மீகத்திலும் உங்களின் பங்கு சிறப்பாக அமையும். காலத்தை வீணடிக்காமல் சுறுசுறுப்புடன் செயல்பட்டு, நற்பலன்களை பெறுவீர்கள். மின் சாதனப் பொருட்கள் விற்பனை சிறப்பாக அமையும்.
கடந்த கால கனவுகளுக்கு தெளிவான சில முன்னேற்பாடுகள் அமையும். சொந்த காலில் நிற்க நினைக்கும். உங்களுக்கு அதற்கான முயற்சிகள் கைகூடும். புனிதமான காரியங்களுக்கு பக்கபலம் கிடைக்கும். எதையும் முன்கூட்டியே செய்துவிட வேண்டுமென்று எண்ணுவீர்கள். சிலருக்கு பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வு கிடைக்கப் பெறுவீர்கள். பொருளாதாரம் சிறக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
17-10-2024 வியாழன் மாலை 05.35 முதல் 19-10-2024 சனி இரவு 08.19 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
பச்சை, வெண்மை, மஞ்சள்.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்மேற்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
புதன், வியாழன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வெள்ளி, செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரும், அம்மன் வழிபாடும் செய்து கிடைத்த பழம், பூக்களால் அர்ச்சனை செய்து வேண்டுதலை சொல்லிவர உங்களின் சகல காரியமும் வெற்றியை தரும்.
துலாம்
நினைத்த காரியத்தை உடனே செய்ய நினைக்கும் துலாம் ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசியில் ராசிநாதன் அமர்ந்து ஏழாமிடத்தை பார்ப்பதும் தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லாபஸ்தானத்தில் அமர்ந்து செய்யும் தொழிலில் சில மாற்றங்கள் செய்து வருமானத்தை பெருக்கி தருவார். ராசிநாதன் ராகு சாரத்தில் இருப்பதால் சிலருக்கு வெளிநாட்டு தொடர்புகளும், வெளிநாட்டு தொழில் வாய்ப்பும் அமையும்.
கிடைக்க வேண்டிய சில தொகை தாமதமானாலும் விரைவில் உங்களுக்கு கிடைக்கப் பெறுவீர்கள். விரையாதிபதி புதன் லாபாதிபதி சூரியனுடன் இணைந்திருப்பது வரவுக்கு தகுந்த செலவுகளும் வந்து சேரும். பஞ்சம ஸ்தானத்தில் சனி வக்கிரகதியில் இருப்பதால் பூர்வீக சொத்து சம்மந்தமான பேச்சுகள் நடக்கும்.
அது சம்மந்தமான விவாதங்களில் தாமதம் ஆனாலும் உங்களுக்கு அடுத்த கட்ட நல்வாய்ப்புகள் அமையும். எதிர்கால நலன் கருதி நீங்கள் எடுக்கும் பல விடயங்கள் இனி படிபடியாக செயல்படத் துவங்கும். சொந்த தொழில் செய்து வருபவர்கள் அதிக முதலீடு செய்வதை தவிர்த்து, இருப்பதை வைத்து சிறப்புடன் இருப்பது நல்லது.
குரு அட்டம ஸ்தானத்தில் இருந்தாலும், சந்திரன் சாரத்தில் இருப்பதால் தேவைகளுக்கு தகுந்த வருமானம் கிடைக்கப் பெறுவீர்கள். எதிலும் அவசர கொள்ளாமல் முன் யோசனையுடன் செயல்படுவதன் மூலம் உங்களின் பொருளாதாரத்தையும், தொழிலையும் மேம்படுத்திக் கொள்ள முடியும்.
கலைத்துறையினருக்கு கலைதுறையில் நல்ல மாற்றம் உண்டாகும். எதிர்பார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பெருமிதம் கொள்வீர்கள். பிணையம் இடுவதை தவிர்ப்பது நல்லது. காலத்தையும், நேரத்தையும் வீணடிக்காமல் முறையான செயல்பாடுகளை விரைவில் செய்து முடித்தால் நற்பலன்களை பெறுவீர்கள். பொருளாதார நிலை தன் நிறைவு பெறும்.
சந்திராஷ்டம நாட்கள்:
19-10-2024 சனி இரவு 08.20 முதல் 21-10-2024 திங்கள் இரவு 12.11 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
வெண்மை, ரோஸ், ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, வடமேற்கு, தெற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வெள்ளி, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிற்றுகிழமைகளில் ராகு காலத்தில் வைரவர் வழிபாடும், நவகிரக வழிபாடு செய்து நல்லெண்ணெய் தீபம் ஏற்றி வேண்டிக் கொள்ள சகல காரியமும் தடையின்றி நடக்கும்.
விருச்சிகம்
தன்கொள்கையில் உறுதியாக இருக்கும் விருச்சிக ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதன் அட்டமஸ்தானத்தில் அமர்ந்து தனஸ்தானத்தையும், தைரியஸ்தானத்தையும் பார்ப்பதால் நீங்கள் எடுத்த காரியத்தை முடிக்காமல் விடமாட்டீர்கள். தொழில் ஸ்தானத்தில் பாக்கியாதிபதி சந்திரன் அமர்வதும், தொழில் ஸ்தானாதிபதி சூரியனும், லாபாதிபதி புதனும் இணைவதும் செய்யும் தொழிலில் நல்ல லாபகரமான சூழ்நிலைகள் உருவாகும்.
எதை செய்தாலும் உங்களின் கவனம் அதில் இருக்கும். முன்னேற்ற பாதையில் உங்களின் பயணம் இருக்கும். அரசியலில் உங்களின் பங்கு நல்ல பலனை தரும். தொழிற்சங்கத்தின் முக்கிய பொறுப்புகள் வசிக்கும் உங்களின் சேவைகள் தொழிலாளர்களின் நலன்களை காப்பதாக இருக்கும். குறுகிய காலத்தில் உங்களின் வளர்ச்சி சிறப்பாக அமையும்.
விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கான வாய்ப்புகள் அமையும். தடைபட்ட சில காரியங்கள் படிபடியாக நிறைவேற துவங்கும். காரியத்தில் நல்ல கவனம் செலுத்தி, நல்ல பலனை அடைவீர்கள். புதிய திட்டம் சற்று தாமதமானாலும் எதிர்காலத்தில் நல்ல பலனை பெற்று தரும். கல்வியில் மாணவர்கள் தேர்ச்சி பெற்று பாராட்டு பெறுவார்கள்.
முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு நல்ல பலனையும், தொடர்புகளால் புதிய அனுபவங்களையும் பெற்று தரும். சுயதொழிலில் நல்ல வளர்ச்சியை பெறுவீர்கள். ஒரு சிலருக்கு தர்ம காரியங்களிலும், கோவில் திருப்பணிகளின் கலந்து கொள்ளும் வாய்ப்பும் அமையும்.
எதையும் ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ என்று இருக்காமல், நன்கு ஆய்வு செய்து அதற்கான பலன்களை அடைய செய்வீர்கள். சித்தியோகத்தில் நன்மதிப்பையும் பாராட்டும் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் வளர்ச்சி பெறுவீர்கள்.
சந்திராஷ்டம நாட்கள்:
21-10-2024 திங்கள் இரவு 12.12 முதல் 24-12-2024 வியாழன் அதிகாலை 06.03 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
ஓரஞ்சு, மஞ்சள். சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடமேற்கு, கிழக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
செவ்வாய், புதன், வியாழன்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
செவ்வாய்கிழமைகளில் சுப்ரமணியரை வணங்கி சிவப்பு நிற பூ வைத்து நெய் தீபம் ஏற்றி உங்களின் வேண்டுதலை சொல்லி வர சகல காரியங்களிலும் வெற்றியையும், பொருளாதார வளமும் பெறுவீர்கள்.
தனுசு
துணிச்சலான முடிவுகளை எடுக்கும் தனுசு ராசி வாசகர்களே!
உங்களின் ராசிக்கு ராசிநாதன் ஆறாமிடத்தில் அமர்ந்து தனஸ்தானத்தை பார்வை இடுவதும், தொழில் ஸ்தானாதிபதியுடன் யோகாதிபதி சூரியன் இணைவு பெற்று நான்காமிடத்தை பார்வை இடுவதும், உங்களின் தொழில் மேன்மைக்கு வழிவகுக்கும் எதையும் திட்டமிட்டு செயல்பட்டாலும் உங்களின் செயல் சில நேரம் தாமதமாக அமையும்.
பஞ்சமாதிபதி செவ்வாய் ராசியை பார்ப்பதால் கூட்டு தொழிலில் முன்னேற்றம் காண்பீர்கள். பாக்கியஸ்தானத்தில் சந்திரன் அமர்ந்திருப்பதும் லாபஸ்தானத்தில் சுக்கிரன் ஆட்சி பெற்று இருப்பதும் உங்களின் தடை பெற்ற நற்காரியங்கள் இனிதே நடக்கும். எதிர்கால நற்பலன்களை கருத்தில் கொண்டு செயல்படுவீர்கள்.
குறுகிய காலத்தில் உங்களின் முதலீடு நல்ல லாபம் கிடைக்கப் பெறுவீர்கள். மூன்றாமிடத்தில் யோக சனியாக அமர்ந்திருந்தாலும் வக்கிர கதியில் இருப்பதால் நினைத்த காரியம் நிறைவேற சில நேரம் தாமதமாகும். கலைத்துறையினருக்கு தொழில் நல்ல வளர்ச்சியும், தொடர்ந்து வாய்ப்புகளும் கைகூடும்.
விளையாட்டு துறை சார்ந்த பயணம் சிலருக்கு செல்ல வேண்டி இருக்கும். உங்கள் காதலை சொல்ல தயங்கிய நிலையில் தைரியமாக தன் காதலை சொல்வீர்கள். புத்திரர்களின் கல்வி நன்றாக இருக்கும். சுய தொழில் செய்பவர்கள் தொழில் முன்னேற்றத்திற்கு சில புதிய உத்திகளைக் கையாண்டு வெற்றி காண்பீர்கள்.
சிலருக்கு புதிய வாகனம் வாங்கும் யோகம் அமையும். உறவினர்களின் பகை நீங்கி, உறவு கொள்ள வாய்ப்புகள் அமையும். ஆலய திருப்பணிகளின் கலந்து கொண்டு, இறை சேவை செய்வீர்கள். கனவுகளை நனவாக்கும் காரியம் சீக்கிரம் உங்களுக்கு பலன் தரும்.
சந்திராஷ்டம நாட்கள்:
24-10-2024 வியாழன் அதிகாலை 06.04 முதல் 26-10-224 சனி பகல் 02.26 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், வெண்மை, சிவப்பு.
அதிர்ஷ்ட திசைகள்:
கிழக்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், வெள்ளி, ஞாயிறு.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
வியாழக்கிழமை காலை 06.00 - 07.00 மணிக்குள் தட்சணாமூர்த்திக்கு நெய் தீபம் ஏற்றி, மஞ்சள் நிற பூ வைத்து உங்களின் வேண்டுதலை சொல்ல, சகல காரியமும் சிறப்பாக அமையும்.
மகரம்
தன்னை நம்பியவர்களை காக்கும் மகர ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு குரு பார்வை பெறுவதும், ராசிநாதன் தனஸ்தானத்தில் அமர்ந்து சந்திரனின் பார்வை ராசிநாதன் மீது படுவதும், உங்களின் தொடர் முயற்சிகளுக்கு நல்ல பலன் உண்டாகும். உங்களின் யோகாதிபதி சுக்கிரன் தொழில் ஸ்தானத்தில் ஆட்சி பெற்று இருப்பதும்.. நற்செயல்களை செய்து கொண்டு தொழிலிலும் கவனம் செலுத்தி மேன்மை பெறுவீர்கள்.
சில தெய்வ வழிபாடுகள் மூலம் குறிப்பாக உங்களின் குல தெய்வ வழிபாடு மூலம் நல்வழிகாட்டியாக அமைந்து, வளம் பெற செய்யும். ராசிநாதன் சனி தனஸ்தானத்தில் இருந்தாலும் வக்கிரம் பெற்று இருப்பதால் பொருளாதாத்தில் சற்று வளர்ச்சி குறைவாக இருக்கும். பொது வாழ்வில் சிறந்த நற்பலன்களை மேலோங்க செய்யும். அரசியல் சார்ந்த சில நண்பர்களின் மூலம் உங்களின் காரியங்களை செய்து முடிப்பீர்கள்.
எதற்கும் துணிச்சலுடன் செயல்பட்டு நன்மை அடைவீர்கள். சொந்த முயற்சிக்கு எடுத்த செயல்பாடுகளுக்கும், வேண்டுதலுக்கும் உடனடி பலன்கள் கிடைக்க பெறுவீர்கள். தொழிற்சங்க பணிகளில் முன்னேற்றம் காண்பீர்கள். எதிர்ப்புகள் குறையும். கொடுத்த வாக்குறுதிகளை நினறவேற்றி கொள்ள உதவிகளை நாடி நற்பலன்களை பெறுவீர்கள்.
முக்கிய பிரமுகர் சந்திப்பு மூலம் நீங்கள் எதிர்பார்த்த பலன்களை பெறுவீர்கள். யாரையும் நம்பிக்கொண்டு இருக்காமல் சுயமாக எதையும் செயல்படுத்துவீர்கள். கலை துறையினருக்கு தொடர் வாய்ப்புகள் அமையும். வெளிநாடு தொடர்பும். வெளிநாடு சென்று வரும் நல்ல வாய்ப்பும் அமையும்.
குறுகிய காலத்தில் உங்களுக்கு சாதகமாக காரிய சித்திகள் அமையும். மன கவலைகள் நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள். கல்வியில் மாணவர்கள் முன்னேற்றமும், தொழில் நுட்ப கல்வியில் வளர்ச்சியையும் பெற்று நலம் பெறுவீர்கள். பொருளாதாரத்தில் சிறந்த வளம் பெறுவீர்கள். பணபுழக்கம் இருக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
26-10-2024 சனி பகல் 02.27 முதல் 28-10-2024 திங்கள் இரவு 01.02 மணி வரை.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், மஞ்சள், வெண்மை.
அதிர்ஷ்ட திசைகள்:
தெற்கு, தென்கிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, புதன், வெள்ளி.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமைகளில் வைரவர் வழிபாடு செய்து மூன்று நல்லெண்ணெயை தீபம் ஏற்றி, முந்திரி பருப்பு மாலை கட்டி வேண்டிக் கொள்ள சகல காரியங்களிலும் தடை நீங்கி சுபிட்சம் பெறுவீர்கள்.
கும்பம்
திடமான நம்பிக்கையும், வெளிப்படை தன்மையும் கொண்ட கும்ப ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ஜென்ம சனியாக சனி ஆட்சி பெற்று இருப்பதும் சந்திரன் ராசியை பார்ப்பதும் தொடர்ந்து பணபுழக்கம் இருந்து வரும். எதிலும் சீக்கிரம் உங்களின் செயல்பாடுகளை செய்து வருவதன் மூலம் செய்து முடிப்பீர்கள். பஞ்சம ஸ்தானாதிபதி அட்டம ஸ்தானத்தில் அமர்ந்து காரிய தடைகளையும், தொழில் போட்டிகளையும் உண்டாக்கும்.
தைரியஸ்தானாதிபதி செவ்வாய் பஞ்சமாதிபதி வீட் டில் அமர்வதால் காரிய தடைகள் வந்து மறையும், அதிக முதலீடுகளை தவிர்ப்பது நல்லது. முக்கிய பிரமுகரின் சந்திப்பு உங்களுக்கு நல்ல பலனை பெற்றுத் தரும். கொடுத்த இடத்தில் பணம் வர தாமதமான நிலைமாறி.. வேகமாக பணம் வருவதற்கான வழி கிடைக்கும்.
சுமூகமான சூழ்நிலைகள் உருவாகும். பாதியில் நின்ற காரியம் சிறிதுசிறிதாக படிப்படியாக செயல்பட துவங்கும். எதிரிகளால் இருந்த தொல்லை நீங்கும். தற்சமயம் சனி வக்கிரகதியில் இருப்பதால் காரியங்களில் சிறு தடைகள் இருந்தாலும், உங்களின் தொடர் முயற்சி மூலம் வெற்றி காண்பீர்கள். எதற்கும் துணிவுடன் தயார் நிலையில் இருப்பீர்கள்.
நண்பர்களின் உதவியை எதிர்பார்க்காமல் உங்களின் கடமையை செய்வீர்கள். கலைத் துறையினருக்கு எடுத்த காரியம் விரைவில் நடக்கும். பொது விடயங்களில் மக்களிடம் செல்வாக்கு உண்டாகும். வெளியூர், வெளிநாடு சென்று வரும் வாய்ப்புகள் அமையும். எதிர்ப்புகள் குறையும். செய்யும் தொழிலில் கவனம் செலுத்தி நன்மையை அடைவீர்கள். சகோதரரின் மூலம் ஆதாயம் கிடைக்கும்.
சந்திராஷ்டம நாட்கள்:
01-10-2024 செவ்வாய் மாலை 05.55 முதல் 04-10-2024 வெள்ளி அதிகாலை 05.36 மணி வரையும்.
28-10-2024 திங்கள் இரவு 01-03 முதல் 31-10-2024 வியாழன் பகல் 12.42 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
நீலம், வெண்மை, ஒரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
மேற்கு, தென்கிழக்கு, வடக்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
சனி, திங்கள், செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
ஞாயிறு மாலை 04.30 முதல் 06.00 மணி வரை வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபம் ஏற்றி, உளுந்து வடை, அரளி பூ மாலை சாற்றி வணங்கி வேண்டுதலை சொல்லி வர, சகல காரியமும் அனுகூலமாகும்.
மீனம்
எதையும் விட்டு கொடுக்காமல் செயல்படும் மீன ராசி வாசகர்களே!
இம்மாதம் உங்களின் ராசிக்கு ராசிநாதன் மூன்றாடமிடத்தில் அமர்ந்து பார்க்கும் இடம் சிறப்பாக அமையும். திருமண தடைகள் நீங்கி, விரைவில் திருமண முயற்சிகள் கைகூடும். தன ஸ்தானாதிபதி செவ்வாய் சுகஸ்தானத்தில் அமர்வதால் புதிய வீடு கட்டும் திட்டம் நிறைவேறும். புதிய கடன் பட்டாலும் அந்த கடன்கள் நியாயமானதாக இருக்கும்.
காலத்தின் கட்டாயம் போல் சில விடயங்களில் எதிர்பாராத சிக்கல்கள் வந்தாலும், நல்ல முன்னேற்றம் உண்டாகும். குடும்ப ஒற்றுமைக்காக பாடுபடுவீர்கள். கணவன் - மனைவிக்குள் சிறு கருத்து வேறுபாடுகள் வர வாய்ப்புண்டு. அதனால் வாக்கு வாதத்தை தவிர்ப்பது நல்லது. எடுத்த காரியம் சில நேரம் உடனே நடக்கலாம்.சிலருக்கு தாமதம் உண்டாகலாம்.
தொடர் இறை வழிபாடு மூலம் வர வேண்டிய கஷ்டங்களிலிருந்து உங்களை காப்பாற்றிக் கொள்ளலாம். அதுவே உங்களின் வெற்றிக்கு உறுதுணையாகவும் அமையும். சகோதரர்களின் மூலம் சிலருக்கு ஆதாய பலன்கள் கிடைக்கும்.
சேமித்து வைத்த பணம் குறைந்தாலும் சில காலம் கழித்து மீண்டும் சேமிப்பு செய்து விடுவீர்கள். பொது வாழ்விலும், அரசியலிலும் விருப்பம் இல்லை என்றாலும் சில நேரம் அவர்களுடன் இணைந்து செயல்படுவீர்கள். ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபாடு இருக்கும். திறம்பட செயல்படுவதன் மூலம் சில மாற்றம் உண்டாக்கி கொள்வீர்கள்.
இசை கலைஞர்களுக்கு வாய்ப்புகள் கிடைக்க பெறுவீர்கள். எதிர்ப்புகளிலிருந்து விடுபட்டு நல்ல சூழ்நிலை உருவாகும். மாணவர்களின் கல்வி வளம் நன்றாக இருக்கும். சொந்த தொழிலில் சுமாரான பலன் கிடைக்கும்.சிறு முதலீடு நல்ல வருமானம் தரும். பொருளாதார நிலை சீராக அமையும்.
சந்திராஷ்டம நாட்கள்:
04-10-2024 வெள்ளி அதிகாலை 05.37 முதல் 06-10-2024 ஞாயிறு மாலை 04.35 மணி வரையும்.
31-10-2024 வியாழன் பகல் 12.43 முதல் 02-11-2024 ஞாயிறு மாலை 04.35 மணி வரையும்.
அதிர்ஷ்ட நிறங்கள்:
மஞ்சள், சிவப்பு ஓரஞ்சு.
அதிர்ஷ்ட திசைகள்:
வடக்கு, வடகிழக்கு, மேற்கு.
அதிர்ஷ்ட கிழமைகள்:
வியாழன், ஞாயிறு, செவ்வாய்.
இம்மாதம் நீங்கள் வழிபடவேண்டிய தெய்வங்கள்:
சனிக்கிழமை ராகு காலத்தில் வைரவருக்கு மூன்று நல்லெண்ணெய் தீபமேற்றி எள் கலந்த அன்னம் நைவேத்தியம் செய்து வழிபட சகல காரியமும் தடையின்றி நன்மை உண்டாகும்.
கணித்தவர்:
ஸ்ரீ வராஹி அம்மன் உபாசகர் குருஜி ஆனந்தன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM