இன்றைய திகதியில் எம்மில் பலரும் தங்களது வருவாய் எவ்வளவு என்பதை தெரிந்து கொண்டு அதற்கு ஏற்ப திட்டமிட்டு வாழ்வார்கள்.
அரசாங்கத் துறையிலும், தனியார் நிறுவனத்திலும் பணியாற்றும் தொழிலாளர்கள் தங்களின் ஊதியம் குறித்த வெளிப்படை தன்மை இருப்பதால் அவர்கள் தங்களின் செலவுகளை திட்டமிடுவர் அதே தருணத்தில் ஊதிய உயர்வு கிடைத்தால் அதனை சேமிக்க மறந்து, வாழ்க்கையை அனுபவிப்பதற்கான செலவாக மாற்றுவர்.
வேறு சிலர் தங்களது மாதாந்திர அல்லது நாளாந்த வருவாய் இதுதான் என தெரிந்து கொண்டதும் அதனை மேம்படுத்துவதற்காகவோ அல்லது அதிகரிப்பதற்காகவோ வழிமுறைகளை தேடிக்கொண்டே இருப்பார்.
இவர்களுக்கு எம்முடைய முன்னோர்கள் சில சூட்சமமான வழிமுறைகளை கற்பித்திருக்கிறார்கள்.
இதனை உறுதியாக பின்பற்றினால் உங்களது வருமானம் உயரும். மகிழ்ச்சியும் அதிகரிக்கும்.
நீங்கள் உங்களது வருமானத்தில் ஒரு சதவீதத்தை எறும்பு, காகம், புறா, நாய், பசு போன்ற செல்ல பிராணிகளுக்கும், வாயில்லா பிராணிகளுக்கும் உணவு தானத்தை வழங்க வேண்டும்.
குறிப்பாக உங்களது வருவாய் மாதந்தோறும் பத்தாயிரம் ரூபாய்கள் என்றால் அதில் ஒரு சதவீதமான நூறு ரூபாயை எறும்புகளுக்கு பச்சரிசி மற்றும் சர்க்கரை கலந்த உணவினை வாங்கி அதற்கு தானமாக உணவிடலாம்.
நாய்களுக்கு பிஸ்கற்றை உணவாக அளிக்கலாம். பசுக்களுக்கு கீரைகள், வாழைப்பழங்கள் போன்றவற்றை தானமாக அளிக்கலாம்.
இப்படி மாதந்தோறும் உங்களுடைய வருவாயில் ஒரு சதவீதத்தை செல்ல பிராணிகளுக்கும், வாயில்லாத பிராணிகளுக்கும் உணவு தானம் வழங்கினால் அவைகளின் சூட்சமமான ஆசியின் மூலமாக உங்களுக்கு வேறு வகைகளில் வருமானம் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
அதேபோல் வறுமையில் வாடிக் கொண்டிருக்கும் ஏழை எளிய மக்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை அல்லது மாதத்திற்கு ஒரு முறை உங்களின் வருமானத்தில் ஒரு சதவீதத்தை கணக்கிட்டு அவர்களுக்கு அன்னதானமாகவோ அல்லது உதவியாகவோ அல்லது நன்கொடையாகவோ வழங்கலாம்.
இதுவும் ஒரு வகையில் உங்களின் வருவாயை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சமமான முறையாகும்.
அதே தருணத்தில் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும் உதவி செய்வது ஒரு போதும் தானம் ஆகாது. தானம் என்பது வேறு. தர்மம் என்பது வேறு. உதவி என்பது வேறு . இந்த வேறுபாட்டை நன்றாக உணர்ந்து கொண்டு முகம் தெரியாத நபர்களுக்கு அன்னதானத்தை வழங்குவது தான் உங்களது வருமானத்தை அதிகரித்துக் கொள்வதற்கான சூட்சமமான முறையாகும்.
அதே தருணத்தில் இந்த தானத்தில் நனி சொல் தானமும் அதாவது அறிவு தானமும் அதாவது நேர் நிலையான அதிர்வை ஏற்படுத்தக் கூடிய சொற்களை பயன்படுத்துவதும் அறிவு தானமாகும்.
உங்களில் ஒருவர் அல்லது உங்களுக்கு அறிமுகமான நபர் கடும் மன உளைச்சலில் இருக்கும் போது அவருக்கு ஆதரவாக நம்பிக்கை அளிக்கும் வகையிலும், ஆறுதல் படுத்தும் வகையிலும் நீங்கள் தன்னம்பிக்கை அளிக்கும் வார்த்தைகளை உதாரணச் சம்பவங்களுடன் விவரித்து, அவர்களின் மனதை திடப்படுத்தினாலும் அதுவும் உங்களுக்கு சூட்சமமான வருவாயை அதிகரிக்கும் வழிமுறைகளில் ஒன்றாகும்.
மேலும் வருமானத்தை அதிகரிக்க மற்றொரு பரிகாரமும் உண்டு. இதற்கு தேவையான பொருட்கள் ஆறு எண்ணிக்கையிலான முனை முறியாத ஏலக்காய், கரும்புள்ளி இல்லாத சுத்தமான எலுமிச்சை பழம், ஒரு நெல்லிக்காய், கீழாநெல்லி செடியின் வேர் பகுதி, கஸ்தூரி மஞ்சள் மூன்று. ஒரு சதுர வடிவிலான வெள்ளை துணி.
மேலே கூறப்பட்ட பொருட்களை வாங்கி வைத்துக்கொண்டு அதனை ஒரு சதுர வடிவிலான வெள்ளைத் துணியில் கட்டி முடிச்சிட்டு, அதனை உங்களுடைய விற்பனை நிலையத்தில் இருக்கும் பணப் பெட்டி அல்லது உங்களது வீட்டில் இருக்கும் பீரோ அல்லது பண பெட்டியில் ஒரு வெள்ளிக்கிழமை அதிகாலை குறிப்பாக பிரம்ம முகூர்த்தத்தில் பிரபஞ்சத்தையும் இறைவனையும் மகாலட்சுமியையும் வணங்கி பொருட்கள் அடங்கிய வெண்மை துணி முடிச்சினை வைத்து விட வேண்டும்.
ஒவ்வொரு வாரமும் வெள்ளிக்கிழமைகளில் இதனை மாற்ற வேண்டும். இப்படி தொடர்ச்சியாக பத்து வெள்ளிக்கிழமைகளில் மேற்கொண்டால் உங்களது வருமானம் அதிகரிப்பதை அனுபவத்தில் காணலாம்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM