எம்மில் சிலருக்கு தலைசுற்றல், மயக்கம், சோர்வு அல்லது இதய படபடப்பு போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால் வைத்திய நிபுணர்கள் இதய துடிப்பு தொடர்பான பிரத்யேக பரிசோதனையை மேற்கொள்ள வேண்டும் என பரிந்துரைப்பர்.
இதற்கான காரணத்தையும், பின்னணியையும் வைத்திய நிபுணர்கள் பின்வருமாறு விளக்குகிறார்கள்.
பரபரப்பு ஏற்பட்டாலோ அல்லது இதய துடிப்பில் சமச்சீரற்ற தன்மை ஏற்பட்டால் அதனை வைத்திய நிபுணர்கள் சமச்சீரற்ற இதய துடிப்பு பாதிப்பு என குறிப்பிடுகிறார்கள்.
இதனை மருத்துவ முறையில் பால்பிடேஷன்ஸ் என்றும் குறிப்பிடுவார்கள்.
மேலும் இதயத்தில் உள்ள மின் சமிக்ஞைகள் இயல்பான அளவில் இருந்தால் இதயத்துடிப்பு சீரானதாக இருக்கும். இதில் ஏதேனும் மாற்றங்கள் ஏற்பட்டால் அவை இதய துடிப்பின் தாள நயத்தை மாற்றும்.
மேலும் சமசீரற்றதாகவும் அமைக்கும். இதனை வைத்தியர்கள் கண்டறிய எலெக்ட்ரோபிசியாலஜி ஸ்டடி எனும் பரிசோதனையை மேற்கொள்வார்கள்.
இதன் போது கால் அல்லது கழுத்து ஆகிய பகுதிகளின் வழியாக பிரத்யேக குழாய்கள் மூலம் இதய துடிப்பு குறித்த ஆய்வு மேற்கொள்ளப்படும்.
இதில் இதயத்துடிப்பு எதனால் சமச்சீரற்றதாக இருக்கிறது என்பதனை துல்லியமாக அவதானிப்பார்கள்.
மேலும் எக்டோபிக் பீட்ஸ் எனப்படும் இதய துடிப்பு ஏற்பட்டால் அதனையும் இத்தகைய பரிசோதனையின் மூலம் துல்லியமாக அவதானிப்பார்கள்.
அதனைத் தொடர்ந்து இதய துடிப்பினை சீராக்குவதற்கான பிரத்யேக சிகிச்சையை மேற்கொள்வார்கள். இதன் மூலம் ஆயுள் முழுவதும் இதய படபடப்பு ஏற்படுவதை தவிர்க்க முடியும்.
வைத்தியர் ஜோசப்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM