தென்னிந்திய திரையுலகின் முன்னணி நட்சத்திர நடிகர்களான சத்ய தேவ், டாலி தனஞ்செயா , சத்யராஜ் ஆகியோர் முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'ஜீப்ரா' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இயக்குநர் ஈஸ்வர் கார்த்திக் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஜீப்ரா' எனும் திரைப்படத்தில் சத்ய தேவ், டாலி தனஞ்செயா, சத்யராஜ், ப்ரியா பவானி சங்கர், சுனில், சத்யா, ஜெனிபர் பிக்கினாடோ உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சத்யா பொன்மார் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு ரவி பஸ்ரூர் இசையமைத்திருக்கிறார்.
இந்த திரைப்படத்தை ஓல்ட் டவுன் பிக்சர்ஸ் மற்றும் பத்மஜா ஃபிலிம்ஸ் இந்தியா பிரைவேட் லிமிடெட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். என். ரெட்டி , எஸ். பத்மஜா, பாலசுந்தரம் ,தினேஷ் சுந்தரம் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 31 ஆம் திகதி தீபாவளி திருநாளன்று தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி ஆகிய இந்திய மொழிகளில் பட மாளிகைகளில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதில் நிதி சார்ந்த முறைகேடுகளில் ஈடுபடுபவர்களுக்கும், அது தொடர்பான எக்சன் கட்சிகளும், எமோஷனல் காட்சிகளும் இடம் பிடித்திருப்பதால் இந்த திரைப்படத்திற்கான எதிர்பார்ப்பு அதிகரித்திருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM