அறிமுக நடிகர் ஜேம்ஸ் கார்த்திக் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'சீரன்' எனும் திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதற்காக சென்னையில் நடைபெற்ற பிரத்யேக நிகழ்வில் இயக்குநர் எம். ராஜேஷ் சிறப்பு அதிதியாக பங்கு பற்றி இசை மற்றும் முன்னோட்டத்தை வெளியிட்டார்.
அறிமுக இயக்குநர் துரை கே. முருகன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'சீரன்' எனும் திரைப்படத்தில் ஜேம்ஸ் கார்த்திக், இனியா, சோனியா அகர்வால், கிரிஷா க்ரூப், 'ஆடுகளம்' நரேன், சென்றாயன், மூர்த்தி, அஜித், ஆர்யன், அருந்ததி நாயர் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
பாஸ்கர் ஆறுமுகம் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு அரவிந்த் ஜெரால்ட் ,சசிதரன், ஜுபின் ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள்.
இந்த திரைப்படத்தை நெட்கோ ஸ்டுடியோஸ் சார்பில் தயாரிப்பாளர் ஜேம்ஸ் கார்த்திக் மற்றும் எம். நியாஸ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.
எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நான்காம் திகதியன்று உலகம் முழுவதும் படமாளிகையில் வெளியாகும் இந்த திரைப்படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு சென்னையில் சிறப்பாக நடைபெற்றது.
இதன் போது நடிகை இனியா பேசுகையில், '' இந்தத் திரைப்படத்தில் பூங்கோதை எனும் கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறேன். 20 வயது பெண், இரண்டு குழந்தைகளுக்கு அம்மா மற்றும் 56 வயது பெண்மணி என மூன்று வெவ்வேறு கெட்டப்புகளில் நடித்திருக்கிறேன்.
இயக்குநர் கதையை விவரித்த போது உண்மை சம்பவங்களை தழுவி திரைக்கதை உருவாக்கப்பட்டிருக்கிறது எனக் குறிப்பிட்டார்.
இந்தத் திரைப்படம் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவரும். ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கல்வி தான் சிறந்த ஆயுதம் என்பதை இப்படத்தின் மூலம் விவரித்திருக்கிறோம் '' என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM