மதுபான சாலையை உடனடியாக இட மாற்றக் கோரி மன்னாரில் மக்கள் போராட்டம்

30 Sep, 2024 | 03:58 PM
image

மன்னார்-தலைமன்னார் பிரதான வீதி,எழுத்தூர் சந்திக்கு அருகாமையில் புதிதாக திறக்கப்பட்டுள்ள மதுபானசாலையை உடனடியாக இட மாற்றக் கோரி பல நூற்றுக்கணக்கான மக்கள் ஒன்றுகூடி போராட்டத்தில் ஈடுபட்டனர்.  

இந்த போராட்டம் இன்று  திங்கட்கிழமை (30) காலை  மதுபானசாலைக்கு முன் முன்னெடுக்கப்பட்டது.  

குறித்த மதுபானசாலை அமைந்துள்ள பகுதியில் மக்களின் குடியேற்றம், இளைஞர் பயிற்சி நிலையம், ஆடைதொழிற்சாலை, பள்ளிவாசல் ஆகியவை காணப்படுகின்ற நிலையில் மக்களின் எதிர்ப்பையும் மீறி குறித்த மது விற்பனை நிலையம் அமைக்கப்பட்டு திறக்கப்பட்டுள்ளதாக மக்கள் குற்றம் சுமத்தியுள்ளனர். 

கடந்த மாதம் குறித்த பகுதியை சேர்ந்த மக்கள் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெமுத்ததோடு,குறித்த மதுபானசாலையை திறக்க அனுமதிக்க வேண்டாம் என கோரி மன்னார் மாவட்ட அரசாங்க அதிபரிடம் மகஜர் கை அளித்ததாகவும், தாங்கள் தொடர்ந்து பல்வேறு எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்த நிலையிலும் குறித்த மது விற்பனை நிலையம் கடந்த வாரம் திறக்கப்பட்டதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர்.  

பிரேத பெட்டியுடன் குறித்த பகுதிக்கு வந்த நூற்றுக்கணக்கான மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதிய பதாகைகளை ஏந்தியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர்.   

இந்நிலையில், சம்பவ இடத்திற்கு வந்த மன்னார் பிரதேசச் செயலாளர் எம்.பிரதீப் மக்களுடன் கலந்துரையாடினார். எனினும் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் குறித்த பகுதிக்கு வர வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்தனர்.  

மக்களின் கோரிக்கைக்கு அமைவாக மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் க.கனகேஸ்வரன் குறித்த பகுதிக்கு வருகை தந்து மக்களுடன் கலந்துரையாடினார்.  

இதன் போது, மக்கள் தமது பிரச்சினைகளை அரசாங்க அதிபரின் கவனத்திற்கு கொண்டு சென்றனர். இந்நிலையில் குறித்த மதுபானசாலையை பிரதேச செயலாளர் அல்லது அரசாங்க அதிபரின் உடனடியாக மூட முடியாது என்றும் மதுவரி திணைக்கள ஆணையாளர் நாயகம் ஊடாகவே நடவடிக்கை எடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.   

மேலும் , இவ்விடயம் குறித்து உடனடியாக மதுவரி திணைக்கள ஆணையாளரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும்,குறிப்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வந்து  மதுபானசாலையை நிரந்தரமாக மூடுவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும், குறிப்பாக தொடர்ச்சியாக மக்களின் எதிர்ப்பு காணப்படுகின்ற நிலையில் குறித்த மதுபானசாலை திறக்கப்பட்டுள்ள விடையத்தை உரிய தரப்பினரின் கவனத்திற்கு கொண்டு வருவதாகவும் அரச அதிபர் தெரிவித்தார்.  

இந்நிலையில் மக்களின் கோரிக்கை அடங்கிய மகஜர் அரசாங்க அதிபரிடம் கையளிக்கப்பட்ட நிலையில் அரச அதிபரின் வாக்குறுதிக்கு அமைய மக்கள் ஆர்ப்பாட்டத்தை கை விட்டுச் சென்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

குடும்பத் தகராறில் வீட்டின் மீது பெற்ரோல்...

2026-02-13 16:27:46
news-image

சட்டவிரோத மீன்பிடித்தலை தடை செய்யுமாறு கோரி...

2026-02-13 16:24:00
news-image

பல்கலைக்கழக மாணவர்களின் கறுப்புக்கொடி போராட்டத்தை 'சட்டவிரோதமானது'...

2026-02-13 16:09:46
news-image

நுவரெலியா, கண்டி மாவட்டங்களுக்கு மீண்டும் மண்சரிவு...

2026-02-13 15:43:24
news-image

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ உள்ளிட்ட ஐவருக்கு விளக்கமறியல்...

2026-02-13 15:26:44
news-image

இரசாயன வாயுவை சுவாசித்த மாணவர்கள் வைத்தியசாலையில்...

2026-02-13 14:51:02
news-image

டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் செயலாளராக வருண...

2026-02-13 14:31:33
news-image

ஏப்ரல் 1 முதல் வாகனங்களுக்கு 2.5%...

2026-02-13 14:19:10
news-image

“முழு நாடுமே ஒன்றாக” தேசிய திட்டம்:...

2026-02-13 13:06:24
news-image

இன்றைய நாணய மாற்று விகிதம்

2026-02-13 13:00:13
news-image

தூதரகப் பிரதானிகள் நால்வரின் பெயர்குறித்த நியமனங்களுக்கு...

2026-02-13 12:58:29
news-image

கடும் மின்னல் தாக்கம் தொடர்பில் எச்சரிக்கை...

2026-02-13 13:01:59