பாலின சிறுபான்மையினரான சம்யுக்தா விஜயன் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'நீல நிறச் சூரியன்' எனும் திரைப்படம் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் நான்காம் திகதியன்று பட மாளிகைகளில் வெளியாகிறது என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
திருநங்கை சம்யுக்தா விஜயன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'நீல நிறச் சூரியன்' எனும் திரைப்படத்தில் சம்யுக்தா விஜயன், கீதா கைலாசம், கஜ ராஜ், மஷாந்த் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
ஸ்டீவ் பெஞ்சமின் ஒளிப்பதிவு செய்து இசையமைத்திருக்கும் இந்த திரைப்படத்தை ஃபர்ஸ்ட் கொப்பி புரொடக்ஷன் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் மாலா மணியன் தயாரித்திருக்கிறார்.
படத்தைப் பற்றி இயக்குநர் பேசுகையில், '' ஒரு ஆண் - பெண்ணாக மாற விரும்புவது குறித்து மட்டும் இல்லாமல், எம்முடைய சமுதாயம் அவர்கள் எப்படி நோக்குகிறது? என்பதையும், அதனை அவர்கள் எப்படி கடந்து தங்களின் லட்சியத்தை அடைகிறார்கள் என்பதையும், 'நீல நிறச் சூரியன்' படத்தில் திரைக்கதையாக உருவாக்கி இருக்கிறேன்'' என்றார்.
பல சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு பாராட்டும், கவனமும் பெற்றிருக்கும் இந்த திரைப்படம் திருநங்கை இயக்கத்தில் உருவாகி இருக்கும் முதல் தமிழ் படம் என்ற அடையாளத்தையும் பெற்றிருப்பதால் ரசிகர்களிடம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM