இரு வெவ்வேறு பிரதேசங்களில் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது சட்டவிரோத மதுபானத்துடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அதன்படி, மொரகஹஹேன பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட மில்லேவ பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் 53 வயதுடைய மில்லேவ பிரதேசத்தை சேர்ந்தவராவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 60 லிட்டர் (80 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மொரகஹஹேன பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை , மீகலேவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குடாகன்னோறுவ பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சட்டவிரோத மதுபானத்துடன் சந்தேக நபர் ஒருவர் நேற்று பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மீகலேவ பிரதேசத்தை சேர்ந்த 45 வயதுடையவர் ஆவார்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபரிடம் இருந்து 45 லீற்றர் (60 போத்தல்கள்) சட்டவிரோத மதுபானம் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மேலதிக விசாரணைகளை மீகலேவ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
















கருத்து
-
-
-
-
-
மேலும் வாசிக்கதேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM