'குட்நைட் ', 'லவ்வர்' ஆகிய படங்களின் வெற்றியை தொடர்ந்து நடிகர் மணிகண்டன் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடிக்கும் புதிய திரைப்படத்திற்கு, 'குடும்பஸ்தன்' என பெயரிடப்பட்டு, அதன் முதல் பார்வை வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை நடிகர் சிலம்பரசன் அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.
இயக்குநர் ராஜேஸ்வர் காளிசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'குடும்பஸ்தன்' எனும் திரைப்படத்தில் மணிகண்டன், சான்வே மகானா, குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.
சுஜித் சுப்பிரமணியம் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு வைசாக் இசையமைக்கிறார்.
இந்த திரைப்படத்தை சினிமாக்காரன் எனும் பட நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் எஸ். வினோத்குமார் தயாரிக்கிறார்.
இப்படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படத்தின் பெயரையும், முதல் பார்வை தோற்றத்தையும் படக்குழு வெளியிட்டிருக்கிறது.
குடும்பஸ்தன் எனும் தலைப்புக்கு ஏற்ற வகையில் கதையின் நாயகனான மணிகண்டன் கால்களில் சக்கரத்தை கட்டிக்கொண்டு பறப்பதை போலவும் அவருக்குள் ஒரு குடும்பஸ்தனாக வெற்றி பெறுவதற்கான சவால்களை எதிர்கொள்வதற்கான தோற்றமும் இடம் பிடித்திருப்பதால் பெரும் வரவேற்பினை பெற்றிருக்கிறது.
இதனிடையே 'குட்நைட் ' , 'லவ்வர்' ஆகிய இரண்டு படங்களை தொடர்ந்து வணிக ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பாரிய வெற்றியை பெற்றதால் அவரது நடிப்பில் தயாராகும் மூன்றாவது திரைப்படமான 'குடும்பஸ்தன்' திரைப்படமும் வெற்றி பெற்று, ஹாட்ரிக் வெற்றியை அவர் தருவாரா..! எனும் எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM