காத்தான்குடியில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் பாடசாலை மாணவன் ஒருவன் தான் செலுத்தி வந்த மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்து பரிதாபகரமாக உயிரிழந்ததாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) மாலை இடம்பெற்றதாக காத்தான்குடி பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
உயிரிழந்த மாணவன் காத்தான்குடி ஐந்தாம் குறிச்சியை மார்க்கட் வீதியில் வசிக்கும் 16 வயதுடைய மாணவனே பரிதாபகரமான முறையில் உயிரிழந்தவராவார்.
இந்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
தனது இல்லத்திற்கு முன்னால் உள்ள சிறிய வீதி ஒன்றில் மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த போது மோட்டார் சைக்கிள் திடீரென சறுக்கி கீழே விழுந்ததால் நெஞ்சு பகுதியில் அடிப்பட்டதால் மேற்படி மரணம் ஏற்பட்டிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது.
காத்தான்குடி அல்ஹிறா மகா வித்தியாலயத்தில் பத்தாம் ஆண்டில் கல்வி பயிலும் குறித்த மாணவன் மூன்று பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் இளைய முதல்வர் ஆவார்.
மரணமானவரின் சடலம் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதுடன் காத்தான்குடி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM