2024 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை மீள நடத்தப்படமாட்டாது என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கடந்த செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி நடைபெற்ற தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்கள் சமூக ஊடகங்களில் கசிந்தது.
இது தொடர்பில் குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வந்ததுடன் பரீட்சையை மீள நடத்துவது குறித்து தீர்மானிப்பதற்குக் கல்வி அமைச்சினால் 7 பேர் கொண்ட குழுவொன்று நியமிக்கப்பட்டிருந்தது.
இக்குழு தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையை மீள நடத்தாமல் இருக்க தீர்மானித்துள்ளதாகக் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
பரீட்சை மீள நடத்துவதனால் ஆசிரியர்களுக்கு, மாணவர்களுக்கு மற்றும் பெற்றோர்களுக்கு பாரிய நெருக்கடிகள் ஏற்படும் எனவும் இக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, கசிந்ததாகக் கருதப்படும் தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை வினாத்தாளின் மூன்று வினாக்களுக்கும் இலவச புள்ளிகள் வழங்கப்பட வேண்டும் எனவும் இக்குழு பரிந்துரைத்துள்ளது.
இந்நிலையில், தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சையின் பெறுபேறுகளை விரைவில் வெளியிடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM