புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது - தடுப்புக் காவலில் வைத்து விசாரணை

Published By: Digital Desk 7

30 Sep, 2024 | 10:37 AM
image

பெரிய நீலாவணையில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் கைதான ஐந்து சந்தேக நபர்களையும் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யுமாறு கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் ஏ.எல்.நதீர் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த வெள்ளிக்கிழமை (27) இரவு அம்பாறை, பெரிய நீலாவணை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாண்டிருப்பு பகுதியில் உள்ள வீடொன்றில் புதையல் தோண்டிய குற்றச்சாட்டில் ஐவர் கைது செய்யப்பட்டிருந்தனர்.

சிலர் வீடொன்றில் புதையல் தோண்டுவதாக பெரியநீலாவணை பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ஜே.எஸ்.கே.வீரசிங்க தலைமையிலான  பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.

அதனையடுத்து, கைதான சந்தேக நபர்களை கல்முனை நீதிமன்ற பதில் நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய வேளையில் சந்தேக நபர்களை இன்று திங்கட்கிழமை (30) வரை தடுப்புக் காவலில் வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.

கைதான ஐவரும் 28 - 30 வயதுக்குட்பட்டவர்கள் என்பதுடன் கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களில் நால்வர் மட்டக்களப்பு மாவட்டம், செங்கலடி பகுதியை சேர்ந்தவர்கள் என  பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களிடமிருந்து புதையல் தோண்டுவதற்கு பயன்படுத்திய பூஜை பொருட்கள், மண்வெட்டி, அலவாங்கு முதலான பொருட்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

அநுர அரசாங்கத்தை பல தசாப்தங்களுக்கு யாராலும்...

2026-09-07 05:05:26
news-image

துப்பாக்கி இயங்காமையால் தோல்வியில் முடிந்த துப்பாக்கிச்...

2026-09-07 00:41:12
news-image

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீதான...

2026-09-07 00:38:06
news-image

ஜனாதிபதியின் பிறந்த ஊரில் சுற்றாடல் அழிவு:...

2026-09-06 12:33:31
news-image

சிவப்பு ஜுண்டாக்களுக்கு அஞ்சோம் : மனோ...

2026-09-06 12:33:56
news-image

தேசிய செயற்கை நுண்ணறிவுக் கொள்கையை நடைமுறைப்படுத்த...

2026-09-06 12:34:33
news-image

அனைத்து விசாரணைக் குழுக்களின் அறிக்கைகளையும் உடன்...

2026-09-06 12:53:14
news-image

நாமல் கைது அரசியல் பழிவாங்கல்; திட்டமிட்டபடி...

2026-09-06 13:06:23
news-image

ஐக்கிய தேசியக் கட்சியின் 80ஆவது ஆண்டு...

2026-09-06 14:41:52
news-image

அநுர அரசாங்கம் நாட்டின் இறையாண்மையை அடகு...

2026-09-06 14:27:30
news-image

அநுரவின் வீதி மூடல் கெடுபிடிகளுக்கு பொதுஜன...

2026-09-06 16:13:24
news-image

225 பாராளுமன்ற உறுப்பினர்களின் சொத்து மற்றும்...

2026-09-06 16:14:05