வீடுகளுக்கு சென்று குர்ஆன் ஓதுவிக்கும் நபரினால் 8 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தப்பட்ட சம்பவம் கடந்த வியாழக்கிழமை (26) அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புற நகர் பகுதியொன்றில் இடம்பெற்றுள்ளது.
இந்த சம்பவம் சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புதிய வளத்தாப்பிட்டி இஸ்மாயில் புரம் பகுதியில் உள்ள வீடொன்றில் இடம்பெற்றுள்ளதாகவும், இந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த 60 வயது மதிக்கத்தக்க சந்தேக நபரை கைது செய்து தடுப்புக்காவலில் வைத்துள்ளதாகவும் சம்மாந்துறை பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பில் சம்மாந்துறை பொலிஸாருக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை (29) கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டுக்கமைய சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியின் வழிகாட்டலில் பொலிஸ் நிலைய பெருங்குற்றப் பிரிவு பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸ் குழுவினர் விசாரணை நடவடிக்கைகளை மேற்கொண்டு சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதனையடுத்து, பாதிக்கப்பட்ட சிறுமி தற்போது சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை சம்மாந்துறை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துவருவதாகவும் தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM