சவூதியில் இறந்த மனைவியின் உடலை மீட்டுத் தருமாறு கணவன் கோரிக்கை!

Published By: Digital Desk 7

30 Sep, 2024 | 11:13 AM
image

வவுனியா ஆண்டியா புளியங்குளம் பகுதியில் வசிக்கும் மூன்று பிள்ளைகளின் தாய் ஒருவர் சவூதி அரேபியா நாட்டில் உயிரிழந்துள்ள நிலையில் அவரது உடலை மீட்டுத் தருமாறு கணவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

உயிரிழந்தவர் 38 வயதுடையவர் என்றும் மூன்று பிள்ளைகளின் தாய் எனவும் கூறப்படுகிறது.

இது தொடர்பாக உயிரிழந்த பெண்ணின் கணவர் தெரிவிக்கையில்,

எனது மனைவி கடந்த இரு வருடங்களுக்கு முன்பாக வேலை விசாவில் சவூதி அரேபியாவுக்கு சென்றார். அநுராதபுரத்தில் உள்ள முகவர் ஒருவரின் ஊடாகவே அவர் சவூதிக்கு பயணம் செய்துள்ளார்.

சவூதிக்கு சென்ற நாளிலிருந்து இதுவரை காலமும் சாதாரண தொலைபேசியில் தான் எம்மோடு கதைத்து வந்தார். அவரது முகத்தை கூட நாம் பார்க்கவில்லை. கடந்த சில நாட்களாக  தனக்கு அங்கு சித்திரவதை இடம்பெறுவதாகவும் தன்னை உடனடியாக நாட்டுக்கு திருப்பி எடுக்கமாறும் கூறினார். இது தொடர்பாக பல தடவை அவரை அனுப்பிய முகவரிடம் கூறியும் உரிய பதிலை அவர் தரவில்லை. இந்நிலையில் எனது மனைவி சில நாட்களாக என்னுடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு உரையாடவில்லை. 

நாம் முகவரை அணுகியபோது அவர் சுகவீனமடைந்து இருப்பதாக எமக்கு தெரிவிக்கப்பட்டது. பின்னர் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தார்கள். அவர் இறந்து 15 நாட்களின் பின்னரே எமக்கு தகவல் வழங்கப்பட்டது. 

தற்போது மரணமடைந்து 40 நாட்கள் கடக்கின்ற நிலையில் எனது மனைவியின் உடலை கொண்டு வருவதற்கான எந்த நடவடிக்கையும் முன்னெடுக்கப்படவில்லை. 

எனவே, அவரது உடலையாவது விரைவாக பெற்றுத்தருவதற்கு உரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

துபாயில் ஒளிந்துகொண்டு இலங்கையில் போதைப்பொருள் கடத்தலில்...

2025-11-07 03:19:52
news-image

யாழில் சட்டவிரோதமாக நிதி சேகரிக்க வந்த...

2025-11-07 02:53:26
news-image

வடமாகாண சுதேசமருத்துவத் திணைக்கள அலுவலகம் மாங்குளத்தில்...

2025-11-07 02:51:14
news-image

இந்த ஆண்டு இதுவரை 2210 வீதி...

2025-11-07 02:35:23
news-image

யாழில் ஹெரோயினுடன் சந்தேகநபர் கைது!

2025-11-07 01:58:41
news-image

யாழில் கூரிய ஆயுதங்கள் மற்றும் போதைப்பொருளுடன்...

2025-11-07 01:55:53
news-image

விசேட மூலோபாய உறவுக்கு முக்கியத்துவமளிப்பதே இலங்கையின்...

2025-11-06 15:10:08
news-image

இந்து சமுத்திரத்தின் அமைதியைப் பாதுகாப்பதற்கு இலங்கை...

2025-11-06 12:15:26
news-image

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்தியாவின்...

2025-11-06 22:17:21
news-image

கண்டி அருப்போலாவில் அமெரிக்கப் பெண் மரணம்...

2025-11-06 22:14:04
news-image

ஐ.நா. பாதுகாப்பு சபையில் இந்தியாவின் வகிபாகம்...

2025-11-06 15:40:08
news-image

2035க்குள் தொழுநோயை முழுமையாக ஒழிக்க அரசாங்கம்...

2025-11-06 21:16:38