(இராஜதுரை ஹஷான்)
பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம். பொதுத்தேர்தலில் போட்டியிடும், கட்சி மற்றும் சின்னம் தொடர்பில் திங்கட்கிழமை (30) அறிவிப்போம் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ரோஹித அபேகுணவர்தன தெரிவித்தார்.
களுத்துறை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு மக்கள் வழங்கியுள்ள ஆணையை மதிக்கிறோம். அரசாங்கத்தை நெருக்கடிக்குள்ளாக்கும் நோக்கம் எமக்கு கிடையாது. ஏனெனில் அரசாங்கம் நெருக்கடிக்குள்ளானால், மக்களும் நெருக்கடிக்குள்ளாகுவார்கள். ஆகவே மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதியிடம் வலியுறுத்துகிறோம்.
தேர்தலில் வெற்றி மற்றும் தோல்வியை ஏற்றுக் கொள்ள வேண்டும். எதிர்க்கட்சியில் இருப்பதொன்றும் எமக்கு புதிதல்ல, எதிர்வரும் நவம்பர் மாதம் 14 ஆம் திகதிக்கு பின்னர் எதிர்க்கட்சியாக செயற்படுவதற்கு தயாராகவுள்ளேன். களுத்துறை மாவட்ட மக்கள் என்னை தெரிவு செய்வார்கள் என்ற நம்பிக்கை உள்ளது.
பொதுத்தேர்தலில் போட்டியிடும் கட்சி மற்றும் சின்னம் தொடர்பான தீர்மானத்தை இன்று அறிவிப்போம். பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அக்கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவோம் என்றார்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM