(நெவில் அன்தனி)
துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் சனிக்கிழமை (28) நடைபெற்ற பங்களாதேஷுடனான ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில் 33 ஓட்டங்களால் இலங்கை வெற்றியீட்டியது.
எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டிக்கு முன்பதாக ஈட்டப்பட்ட இந்த வெற்றி இலங்கை அணிக்கு பெரும் உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.
இலங்கை தனது இரண்டாவதும் கடைசியுமான பயிற்சிப் போட்டியில் ஸ்கொட்லாந்தை நாளை திங்கட்கிழமை எதிர்த்தாடவுள்ளது.
ஹாசினி பெரேரா, நிலக்ஷிகா சில்வா ஆகியோரின் சிறப்பான துடுப்பாட்டங்களும் சுகந்திகா குமாரி இனோஷி ப்ரியதர்ஷனி ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இலங்கை மகளிர் அணியின் இலகுவான வெற்றியில் முக்கிய பங்காற்றின.
அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றது.
ஹாசினி பெரேரா, நிலக்ஷிகா சில்வா ஆகிய இருவரும் 4 விக்கெட்டில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்தனர்.
ஹாசினி பெரேரா 43 ஓட்டங்களையும் நிலக்ஷிகா சில்வா 30 ஓட்டங்களையும் பெற்றனர். அவர்களைவிட ஹர்ஷிதா சமரவிக்ரம 29 ஓட்டங்களையும் விஷ்மி குணரட்ன 14 ஓட்டங்களையும் பெற்றனர்.
பந்துவீச்சில் ஷொர்ணா அக்தர் 18 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.
அணித் தலைவி நிகார் சுல்தானா, 10ஆம் இலக்க வீராங்கனை டிஷா பிஸ்வாஸ் ஆகிய இருவரும் 9ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 40 ஓட்டங்கள் பங்களாதேஷுக்கு கௌரவமான மொத்த எண்ணிக்கை கிடைக்க உதவியது.
நிகார் சுல்தானா ஆட்டம் இழக்காமல் 30 ஓட்டங்களையும் டிஷா பிஸ்வாஸ் 25 ஓட்டங்களையும் பெற்றனர்.
தாஜ் நிஹார் 16 ஓட்டங்களைப் பெற்றார்.
பந்துவீச்சில் சுகந்திகா குமாரி 8 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் இனோஷி ப்ரியதர்ஷனி 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.
அச்சினி குலசூரிய, இனோக்கா ரணவீர, சமரி அத்தபத்து, ஷ ஷினி கிம்ஹானி ஆகியோர் தலா ஒரு விக்கெட்டைக் கைப்பற்றினர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM