சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை இலங்கை தொடர்வது அவசியம் என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.
அமெரிக்க வர்த்தக சம்மேளனத்தின் நிகழ்வில் உரையாற்றுகையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது
இலங்கை கடந்த வாரம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த தருணத்தை சந்தித்தது ,அனைத்து இலங்கையர்களும் தங்களின் ஜனநாயக உரிமையை பயன்படுத்துவதற்காகவும்,நாட்டின் சிறந்த எதிர்காலத்திற்கான தங்களின் நோக்கத்தை வெளிப்படுத்துவதற்காகவும் வாக்களித்தார்கள்.
தேர்தல் அமைதியாக நடைபெறுவதையும்,இலங்கையின் 9வது நிறைவேற்றதிகார ஜனாதிபதி பதவியேற்பதை நேரடியாக பார்த்தமையும் சிறப்பான விடயங்கள்.
தேர்தலும் பதவியேற்பு நிகழ்வும் நாட்டின் ஜனநாயக இலட்சியங்கள் மற்றும் ஸ்தாபனங்களின் வலுவிற்கான உண்மையான சான்றுகளாகும்.
அமெரிக்கா ஜனாதிபதி அனுரகுமாரவிற்கு அவரது வெற்றிக்காக வாழ்த்துவதுடன் இலங்கையருக்கான மேலும் ஒளிமயமான மற்றும் ஸ்திரமான எதிர்காலத்திற்காக அவருடனும் அவரது அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட ஆர்வமாகஉள்ளோம்.
இந்த அரசாங்கத்தி;ன் ஆரம்பநாட்கள் என்கின்ற போதிலும் ,எங்கள் நாடுகளும் எங்கள் மக்களும் முன்னர் எப்போதையும் விட பொதுவான பகிரப்பட்ட இலக்குகளை கொண்டுள்ளனர் என்பது தெளிவான விடயம்.
புதிய வெளிநாட்டு முதலீடுகளை பெற்றுக்கொள்வது குறித்த புதிய ஜனாதிபதி வெளிவிவகார அமைச்சரின் அர்ப்பணிப்பினை நாங்கள் வரவேற்கின்றோம்.
பொருளாதாரத்தினை முன்னோக்கி நகர்த்துவதற்கும் இலங்கை மக்களிற்கு புதிய வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் இந்த அர்ப்பணிப்பு மிகவும் அவசியமானது.
இலங்கை புதிய வெளிநாட்டு முதலீட்டை கவருவதற்கான முயற்சிகளில் ஈடுபடும்போது வெளிப்படைதன்மையை பேணுவதும்,முதலீட்டாளர்களிற்கு உயர் தராதரத்தை பேணுவதும் அவசியம்.
இது முதலீடுகள் வேலைவாய்ப்பை உருவாக்கும்,வளர்ச்சி அதிகரிக்கும்,அனைத்து இலங்கையர்களிற்கும் நேர்மையான முறையில் பயனளி;க்கும் நிலையை ஏற்படுத்தும்.
மேலும் ஸ்திரமான வர்த்தக சூழல் என்பது பல்வேறுபட்ட சாதகமான தாக்கங்களை ஏற்படுத்தும்,மேலதிக வெளிநாட்டு முதலீட்டினை கொண்டுவரும்.
இலங்கையின் தற்போது முன்னெடுக்கப்படும் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகளிற்கு ஆதரவளிப்பது வளர்ச்சியை ஊக்குவிப்பது உட்பட எங்களின் இரு தரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்காக ஜனாதிபதி அனுரகுமாரதிசநாயக்கவுடனும் அவரது அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளோம்.
அமெரிக்காவே இலங்கையின் மிகப்பெரிய ஏற்றுமதி சந்தையாக காணப்படுகின்றது,இதன் காரணமாக உற்பத்தியையும் ஏற்றுமதிக்கான திறமையையும் கட்டியெழுப்புவது அவசியம்.
இந்த வளர்ச்சியில் அமெரிக்க வர்த்தக சம்மேளனமும் அதன் உறுப்பினர்களும் முக்கிய பங்களிப்பை வழங்குவார்கள்,அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார மீட்சி என்ற ஜனாதிபதியின் இலக்கை அடைவது குறித்து இலங்கை ஜனாதிபதியுடன் ஈடாடுவதற்கான தகுந்ததருணத்திலான சந்தர்ப்பத்தை பெற்றுக்கொள்வார்கள்.
இந்த சூழலில் சர்வதேச நாணயநிதியத்தின் திட்டத்தினை இலங்கை தொடர்வது அவசியம், குறிப்பாக ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள்,சிறந்த முறையில் செயற்படாத அரசநிறுவனங்களை மறுசீரமைத்தல் போன்றவை குறித்து கவனம் செலுத்தவேண்டும்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM