பேலியகொடையில் வெவ்வேறு பகுதிகளில் ஐஸ் போதைப்பொருளுடன் இருவர் கைது

Published By: Digital Desk 2

29 Sep, 2024 | 12:12 PM
image

பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பேலியகொட மீன் சந்தைக்கு அருகில் ஐஸ் போதைப்பொருளை வைத்திருந்த ஒருவர் நேற்று சனிக்கிழமை (28) கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர். 

பேலியகொட பொலிஸ் நிலைய அதிகாரிகள் குழுவினர் மேற்கொண்ட சுற்றிவளைப்பின்போது இந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் வெல்லம்பிட்டிய பிரதேசத்தை சேர்ந்த 24 வயதுடையவர் ஆவார்.

சந்தேக நபரிடமிருந்து 11 கிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் பேலியகொட பொலிஸார் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை,  பேலியகொட பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதேசத்தில் மற்றுமொரு பகுதியில் ஐஸ் போதைப்பொருள் வைத்திருந்த மேலும் ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாக பேலியகொட பொலிஸார் தெரிவித்தனர்.

கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் களனி பிரதேசத்தை சேர்ந்த 37 வயதுடையவர் ஆவார்.

இந்த சந்தேக நபரிடமிருந்து 05 கிராம் 200 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளில் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பாதாள உலக கும்பலைச் சேர்ந்த போதைப்பொருள்...

2025-03-25 15:25:35
news-image

அநுராதபுரத்தில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது

2025-03-25 14:52:55
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திலிருந்து...

2025-03-25 15:23:15
news-image

தேசபந்து தென்னக்கோனை பதவியிலிருந்து நீக்குவதற்கான பிரேரணை...

2025-03-25 14:09:19
news-image

யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம்...

2025-03-25 13:46:30
news-image

உள்ளூர் அதிகார சபைகளுக்கான கட்டுப்பணம் செலுத்தும்...

2025-03-25 13:54:47
news-image

சட்டவிரோத தையிட்டி விகாரையும் புதிய மடாலயமும்...

2025-03-25 13:14:31
news-image

தமிழக மீனவர்கள் விவகாரம் தொடர்பில் இலங்கை...

2025-03-25 13:00:07
news-image

இரு வெவ்வேறு பகுதிகளில் முச்சக்கரவண்டிகள் திருட்டு...

2025-03-25 12:53:38
news-image

தேர்தல் செயற்பாடுகள், முறைப்பாடுகள் தொடர்பாக வடக்கு...

2025-03-25 12:39:54
news-image

இலங்கையின் படையதிகாரிகளை வெளிநாடுகள் தாக்கும்போது அவர்களை...

2025-03-25 12:40:16
news-image

போலி விசாக்களைப் பயன்படுத்தி கனடாவுக்குத் தப்பிச்...

2025-03-25 12:36:47