நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்டில் சீரற்ற காலநிலையால் இலங்கையின் வெற்றி தாமதிப்பு

28 Sep, 2024 | 07:00 PM
image

(நெவில் அன்தனி)

நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் 2ஆவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் 3ஆம் நாளான இன்றைய தினம் தேநீர் இடைவேளைக்குப் பின்னர் போதிய வெளிச்சமின்மையாலும் தொடர்ந்து மழை பெய்ததாலும் ஆட்டம் நிறுத்தப்பட்டதால் இலங்கையின் வெற்றி தாமதிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் சுழல்பந்துவீச்சில் சிக்கித் திணறிய நியூஸிலாந்து முதல் இன்னிங்ஸில் 39.5 ஓவர்களில் 88 ஓட்டங்களுக்கு சுருண்டது. ப்ரபாத் ஜயசூரிய 6 விக்கெட்களையும் நிஷான் பீரிஸ் 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் பலோ ஒன் முறையில் இரண்டாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிவரும் நியூஸிலாந்து 3ஆம் நாள் ஆட்டம் நிறுத்தப்பட்டபோது 5 விக்கெட்களை இழந்து 199 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.

நியூஸிலாந்தின் 2ஆவது இன்னிங்ஸில் 5 விக்கெட்கள் மாத்திரம் மீதம் இருக்க, இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்ப்பதற்கு அவ்வணி மேலும் 315 ஓட்டங்களைப் பெறவேண்டியுள்ளது.

போட்டியின் 3ஆம் நாளான இன்று சனிக்கிழமை (28) காலை தனது முதலாவது இன்னிங்ஸை 2 விக்கெட் இழப்புக்கு 22 ஓட்டங்களிலிருந்து தொடர்ந்த நியூஸிலாந்து 3ஆம் நாள் ஆட்டத்தில் மதிய போசன இடைவேளைக்கு சற்று முன்னர் சகல விக்கெட்களையும்   இழந்து 88 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.

துடுப்பாட்டத்தில் மிச்செல் சென்ட்னர் 29 ஓட்டங்களையும் டெரில் மிச்செல் 13 ஓட்டங்களையும் ரச்சின் ரவிந்த்ரா 10 ஓட்டங்களையும் பெற்றனர்.

இவர்கள் மூவரைத் தவிர வேறு எவரும் இரட்டை இலக்கை எண்ணிக்கையை எட்டவில்லை.

பந்துவீச்சில் ப்ரபாத் ஜயசூரிய 6 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 18 ஓவர்களில் 42 ஓட்டங்களுக்கு 6 விக்கெட்களையும் அறிமுக வீரர் நிஷான் பீரிஸ் 33 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் வீழ்த்தினர்.

அசித்த பெர்னாண்டோ 8 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டை வீழ்த்தினார்.

முதல் இன்னிங்ஸ் நிறைவில் 514 ஓட்டங்கள் வித்தியாத்தில் நியூஸிலாந்து பின்னிலையில் இருந்ததால் அவ்வணியை பலோ ஒன் முறையில் துடுப்பெடுத்தாடுமாறு இலங்கை அணித் தலைவர் தனஞ்சய டி சில்வா பணித்தார்.

மதிய போசன இடைவேளைக்கு முன்னர் தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்த நியூஸிலாந்து முதல் ஓவரிலேயே டொம் லெதமை இழந்தது.

2ஆவர் வீசப்பட்ட நிலையில் மதியபோசன இடைவேளை வழங்கப்பட்டு மீண்டும் ஆட்டம் தொடர்ந்தபோது நியூஸிலாந்து சற்று நிதானத்துடன் துடுப்பெடுத்தாடியது.

டெவன் கொன்வே, கேன் வில்லியம்சன் ஆகிய இருவரும்  2ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களைப் பகிர்ந்திருந்தபோது டெவன் கொன்வே 61 ஓட்டங்களுடன்  ஆட்டம் இழந்தார்.

அதன் பின்னர் கேன் வில்லியம்சன் (46), டெரில் மிச்செல் (1), ரச்சின் ரவிந்த்ரா (12) ஆகிய மூவரும் 11 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர்.

எனினும் டொம் ப்ளண்டெலும் க்லென் பிலிப்ஸும் நிதானத்துடன் துடுப்பெடுத்தாடி  பிரிக்கப்படாத 6ஆவது விக்கெட்டில் 78 ஓட்டங்களைப் பகிர்ந்துள்ளனர்.

3ஆம் நாள் ஆட்ட நேர முடிவில் ஆட்டம்டொம் ப்ளண்டெல் 47 ஓட்டங்களுடனும் க்ளென் பிலிப்ஸ் 32 ஓட்டங்களுடனும்  இழக்காதுள்ளனர்.

பந்துவீச்சில் நிஷான் பீரிஸ் 91 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனஞ்சய டி சில்வா 17 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் ப்ரபாத் ஜயசூரிய 76  ஓட்டங்களுக்கு   ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.

இந்தப் போட்டியில் இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 602 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டிருந்தது.

கமிந்து மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 182 ஓட்டங்களையும் தினேஷ் சந்திமால் 116 ஓட்டங்களையும் குசல் மெண்டிஸ் ஆட்டம் இழக்காமல் 106 ஓட்டங்களையும் ஏஞ்சலோ மெத்யூஸ் 88 ஓட்டங்களையும் திமுத் கருணாரட்ன 46 ஓட்டங்களையும் தனஞ்சய டி சில்வா 44 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில்  க்லென்  பிலிப்ஸ் 141 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களைக் கைப்பற்றினார்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யிடமும் தோல்வி அடைந்ததால் முதல் சுற்றுடன்...

2024-10-05 20:40:58
news-image

இலங்கை - அவுஸ்திரேலியா மகளிர் ரி20...

2024-10-05 15:13:56
news-image

ஆசிய றக்பி எமிரேட்ஸ் 18வயதின் கீழ்...

2024-10-04 19:15:40
news-image

பந்துவீச்சில் மிலாபா, துடுப்பாட்டத்தில் லோரா, தஸ்மின்...

2024-10-04 19:02:14
news-image

மகளிர் ரி20 உலகக் கிண்ணத்தில் இலங்கைக்கு...

2024-10-04 01:43:15
news-image

ஸ்கொட்லாந்தை வீழ்த்தி உலகக் கிண்ணத்தில் 10...

2024-10-03 23:07:14
news-image

கிரிக்கெட் வீராங்கனைகளின் ஆற்றல்களைப் பரீட்சிக்கும்  ஐ.சி.சி....

2024-10-03 10:51:18
news-image

தேசிய மட்ட பளு தூக்கல் போட்டியில்...

2024-10-01 13:04:04
news-image

தினுர, விஷ்மி அதிசிறந்த பாடசாலைகள் கிரிக்கெட்...

2024-09-30 20:42:17
news-image

நியூஸிலாந்தை இன்னிங்ஸால் வென்று தொடரை முழுமையாகக்...

2024-09-29 18:13:23
news-image

நியூஸிலாந்துடனான 2ஆவது டெஸ்ட் போட்டியில் ஓர்...

2024-09-29 13:33:58
news-image

பங்களாதேஷுடனான உலகக் கிண்ண பயிற்சிப் போட்டியில்...

2024-09-29 12:46:01