கொடுத்த பணம் திரும்ப கிடைக்க வலிமையான பரிகாரம்

28 Sep, 2024 | 06:24 PM
image

எம்மில் சிலர் நட்பின் காரணமாகவோ அல்லது உறவின் முறை காரணமாகவோ அல்லது கூடுதல் வருவாய் வருகிறதே என்பதற்காகவோ ஓரளவு நேர்மையாக செயல்படும் நபர்களுக்கு கடன் உதவி வழங்கிடுவர். 

கடன் பெற்றவர்களும் கடன் தொகையை முதலீடு செய்து அதனூடாக கிடைக்கும் வருவாயிலிருந்து, தங்களுடைய வாழ்வாதாரத்திற்கான செலவை செய்துவிட்டு, மீதமுள்ளதை வட்டியாகவும், அசலாகவும் தவணை முறையில்  கட்டத் தொடங்குவர். 

இவை அனைத்தும் வியாபாரம் செழிப்பாக சென்று கொண்டிருக்கும் வரை சாத்தியப்படும். வியாபாரம் என்பது தொடர்ச்சியாக நிலைத்த நிலையில் வருவாயை தரும் என்பதாக வரலாறு கிடையாது. 

இதன் காரணமாக சில தருணங்களில் கடினமான சூழல்களில் வியாபாரம் மந்தமானால் அதன் மூலம் கிடைக்கும் தொகையை கடனுதவி வழங்கியவர்களுக்கு வட்டியும், அசலையும் இணைத்து வழங்க முடியாத நிலை ஏற்படும். ஒரு மாதம் இரண்டு மாதம்  இதற்காக ஏதேனும் காரணத்தை சொன்னால் அவர்கள் நம்புவார்கள். 

ஆனால் மூன்றாவது மாதத்தில் இருந்து நீங்கள் சொல்லும் காரணத்தை நம்ப மறுப்பதுடன் உறவில் விரிசலும் ஏற்பட தொடங்கும் இதன் காரணமாகவே கடன் உதவி பெற்றவர்கள் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகிறார்கள். 

இவர்கள் மட்டுமல்லாமல் இவர்களுக்கு கடன் உதவி வழங்கியவர்களும் விவரிக்க இயலாத மன பாதிப்பிற்கு ஆளாகிறார்கள். 

கடன் பெற்றவர்கள் ஒரு எல்லையில் 'பணம் வந்தால் கட்டுகிறேன்' என்ற நிலைப்பாட்டை மேற்கொள்வார்கள். 

ஆனால் கடன் உதவி வழங்கியவர்கள் சொல்ல முடியாத துயரத்தில் ஆழ்ந்து விடுவார்கள். இவர்கள் உடனடியாக ஆன்மீக முன்னோர்களையும், சோதிட நிபுணர்களையும் அணுகி வசூல் ஆகாத தங்கள் பணத்தை மீண்டும் வசூலிப்பது எப்படி? என்பது குறித்து ஆலோசனையை கேட்பார்கள்.  

இந்த தருணத்தில் எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் இது தொடர்பாக வலிமையான பரிகாரம் ஒன்றை முன்மொழிந்திருக்கிறார்கள்.

இதற்கு தேவையான பொருட்கள் பொட்டுக்கடலை, மயூரபந்தம் எனும் பாடல் வரிகள் அடங்கிய பக்தி நூல்.

அருகில் உள்ள முருகன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அந்த ஆலயத்தில் மயில்கள் இருந்தால் அதற்கு பொட்டுக் கடலையை உணவாக தானம் அளிக்க வேண்டும். 

மேலும் அந்த ஆலயத்தில் மயிலுக்கு சிலை இருந்தால் அதற்கு செவ்வரளி பூவை சாற்றி வழிபட வேண்டும். அதன் போது மயூரபந்தம் எனும் பாடலை உச்சரிக்க வேண்டும். 

இதனை தொடர்ந்து ஆறு வாரங்களுக்கு செவ்வாய்க்கிழமைகளில் மேற்கொள்ள வேண்டும். முருகன் ஆலயத்தில் இருக்கும் மயில் சிலைக்கு தனி ஆற்றல் உண்டு. 

அதிலும் கொடுத்த கடனை திருப்பி வசூலிப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்தும் ஆற்றல் அதற்கு உண்டு என்பதால் அதனை செவ்வரளி பூ சாற்றி, பொட்டுக் கடலையை நிவேதனமாக படைத்து வணங்க வேண்டும். 

அந்த பொட்டுக்கடலையை அந்த வளாகத்தில் மயில்கள் இருந்தால் அதற்கு உணவாக அளிக்க வேண்டும். 

இதை நம்பிக்கையுடன் மேற்கொள்ளும் போது ஆறாவது வாரம் நிறைவடைந்த உடன் உங்களுடைய கடன் தொகையிலிருந்து ஒரு குறிப்பிட்ட தொகை உங்கள் கைக்கு வருவதை நீங்கள் அனுபவத்தில் காணலாம்.

சிலர் ஆறு வாரங்களுக்குப் பிறகும் எம்முடைய கடன் தொகை வசூல் ஆகவில்லை என கருதினால் ஒரு A4 அளவுள்ள வெள்ளை காகிதத்தை எடுத்துக்கொண்டு, அதன் நான்கு புறங்களிலும் மஞ்சளை பூசுங்கள். 

காகிதத்திற்குள் நீங்கள் கடனுதவி வழங்கிய நபரின் பெயர் கடனுதவியாக வழங்கிய தொகை ஆகியவற்றை எழுதி இந்த காகிதத்தின் மையப் பகுதியில் குங்கும பொட்டிட்டு. 

அதனை நான்காக மடித்து உங்களுக்கு அருகில் உள்ள மலைப் பகுதிக்கு சென்று அல்லது சிறிய குன்றுள்ள பகுதிக்குச் சென்று அங்குள்ள பாறையின் இடுக்கில் பறந்து செல்லாத வண்ணம் இந்த காகிதத்தை சொருகி வைத்து விட வேண்டும். 

இதற்குப் பிறகு பிரபஞ்சத்திடம் எம்மிடம் கடன் உதவி பெற்றவர் எப்பாடுபட்டாவது எம்முடைய கடன் தொகையை குறைந்த பட்சம் 75% ஆவது திருப்பித் தர வேண்டும் என்பதை மனதார பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். 

இந்த பிரார்த்தனையை ஒரு முறை செய்தால் போதும். அதன் பிறகு 48 நாட்களுக்குள் நீங்கள் கடன் உதவி வழங்கிய நபர் உங்களை நாடி அவரால் இயன்ற அளவிற்கு கடன் தொகையை வழங்குவதை அனுபவத்தில் காணலாம்.

தொகுப்பு : சுபயோக தாசன்

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

பண வரவை அதிகரிப்பதற்கான எளிய வாழ்வியல்...

2024-10-12 18:08:24
news-image

பண வரவை அதிகரிப்பதற்கான பிரத்யேக குபேர...

2024-10-12 08:46:23
news-image

நீச்சமடைந்த கிரகங்களுக்குரிய வாழ்வியல் பரிகாரம்...?

2024-10-09 17:13:33
news-image

திடீர் அதிர்ஷ்டம் கிடைப்பதற்கான சூட்சமமான வழிபாடு...!!?

2024-10-08 17:13:01
news-image

இல்லங்களில் சகல ஐஸ்வரியங்களும் தங்குவதற்கான எளிய...

2024-10-07 15:06:17
news-image

சுக்கிர பகவானின் வலிமையை அதிகரித்துக் கொள்வதற்கான...

2024-10-05 21:38:45
news-image

அதிக நன்மைகளை அள்ளித் தரும் பாணலிங்கம்

2024-10-04 18:33:02
news-image

தீய சக்திகள் விலகுவதற்கான எளிய வழிமுறைகள்..?

2024-10-03 16:20:27
news-image

செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் கண்...

2024-10-03 17:10:09
news-image

பாலாரிஷ்ட தோஷத்தை அகற்றும் சப்த கன்னிமார்...

2024-10-01 16:59:14
news-image

ஒக்டோபர் மாத ராசி பலன்கள் 2024

2024-09-30 18:10:05
news-image

வருவாய், வருமானம் அதிகரிப்பதற்கான சூட்சம வழிமுறைகள்...!?

2024-09-30 16:53:33