தயாரிப்பு : செந்தூர் ஃபிலிம் இன்டர்நேஷனல்
நடிகர்கள் : விஜய் அண்டனி, கௌதம் வாசுதேவ் மேனன், ரியா சுமன், சரண் ராஜ், தமிழ், ரெடின் கிங்ஸ்லி, விவேக் பிரசன்னா மற்றும் பலர்.
இயக்கம் : தனா எஸ். ஏ.
மதிப்பீடு : 2/5
மணிரத்னம் எனும் சர்வதேச இயக்குநரிடமிருந்து தயாரான இயக்குநர் தனா இயக்கத்தில் உருவான படம் என்பதாலும், விஜய் அண்டனி கதை கேட்டு, பிடித்து நடிக்க ஒப்புக்கொண்டதாலும், 'ஹிட்லர்' திரைப்படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. இந்த எதிர்பார்ப்பினை திரைப்படம் பூர்த்தி செய்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
தமிழகத்தின் மலை கிராமம் ஒன்றில் ஆற்றைக் கடப்பதற்காக பெண் கூலி தொழிலாளர்கள் நாளாந்த பணி முடிந்து காத்திருக்கிறார்கள்.
மழை தொடர்ச்சியாக பெய்வதால் வீட்டிற்குச் சென்று குடும்ப உறுப்பினர்களுக்கு பசியாறுவதற்கான உணவை தயாரிக்க வேண்டும் என்ற நெருக்கடியினாலும் வேறு வழி இல்லாமல் அக்கறையைக் கயிறு ஒன்றின் துணையுடன் கடக்கிறார்கள்.
மழை நீரின் வேகம் காரணமாக அவர்கள் ஆற்றில் மூழ்கி இறக்கிறார்கள்.
இதனைத் தொடர்ந்து தமிழ் திராவிட சமுதாய கட்சி எனும் அரசியல் கட்சி தமிழ் மாநிலத்தை ஆட்சி செய்து கொண்டிருக்கிறது.
இந்த கட்சி மீண்டும் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமைப்பதற்கான முயற்சியிலும் ஈடுபட்டிருக்கிறது.
இந்த தருணத்தில் இந்த கட்சியின் முக்கிய புள்ளியும், பொதுப்பணி துறை அமைச்சருமான சரண் ராஜ் ஊழல் வழக்கில் சிக்குகிறார்.
இதனால் நடைபெறவிருக்கும் தேர்தலில் இவர் வெற்றி பெறுவது சந்தேகம் என கருத்துக் கணிப்பு வெளியாகிறது.
இதனால் எப்படியாவது வாக்காளர்களுக்கு பண அன்பளிப்பு அளித்து வாக்கினை பெறுவதற்காக முயற்சிக்கிறார். இதற்காக கோடிக்கணக்கில் அவர் அனுப்பும் பணத்தை ஒரு கும்பல் திட்டமிட்டு திருடி செல்கிறது.
அத்துடன் பணத்தை வைத்திருக்கும் நபர்களையும் சுட்டுக் கொன்று விடுகிறார்கள்.
இந்த கொலையை விசாரிப்பதற்காக காவல்துறை அதிகாரி ஒருவர் களமிறங்குகிறார்.
இதே தருணத்தில் கிராமப்புற பகுதியிலிருந்து வேலை தேடி சென்னைக்கு வருகிறார் விஜய் அண்டனி. புகையிரத நிலையத்தில் எதிர்பாராவிதமாக நாயகியை சந்திக்கிறார். மோதலில் அறிமுகமான இவர்கள் இருவருக்கும் இடையே காதல் உருவாகிறது. அந்த காதலில் வெற்றி பெறுவதற்காக விஜய் அண்டனி போராடுகிறார்.
இந்த தருணத்தில் பணத்தை கொள்ளையடிப்பது யார்? அவர்களை சுட்டு வீழ்த்துவது யார்? நாயகன் விஜய் அண்டனியின் காதல் கை கூடியதா? இது போன்ற வினாக்களுக்கு பரபரப்பாக பதில் சொல்வது தான் 'ஹிட்லர்' படத்தின் கதை.
வழக்கமான கதையை எந்தவித புதிய சுவாரசியமான திருப்பங்களோ காட்சிகளோ இல்லாமல் பார்வையாளர்களின் எதிர்பார்ப்பிற்கு ஏற்ப திரைக்கதை பயணிப்பதால் சோர்வு ஏற்படுகிறது. வெற்றி பெற்ற சில திரைப்படங்களையும் நினைவுபடுத்துகிறது.
விஜய் அண்டனி எக்சன் காட்சிகளில் அதிரடி காட்டுகிறார். ஆனால் காதல் காட்சிகளில் நடிக்க தடுமாறுகிறார்.
நாயகி ரியா சுமன் அழகாக இருக்கிறார். நடிக்கவும் முயற்சிக்கிறார். ஆனால் காதல் காட்சிகள் ஏற்கனவே பார்த்த பல படங்களை நினைவுபடுத்துவதால் அதில் இளமையும் இல்லை. புதுமையும் இல்லை.
ஒரு இடத்தில் நாயகி 'நான் ஆம்பளங்கள நம்புவதில்லை..' என பேசும் வசனம் மட்டும் பளிச். ரெடின் கிங்ஸ்லியின் நகைச்சுவைக்கு சிரிப்பு வர மறுக்கிறது.
நடிகர்களில் ஆறுதல் தருபவராக இருப்பவர் காவல் அதிகாரியாக நடித்திருக்கும் கௌதம் மேனன். அவருடைய கதாபாத்திரத்தின் வழியாகவே திரை கதையை வடிவமைத்திருந்தால் இன்னும் சிறப்பாக இருந்திருக்கும்.
தன் பங்களிப்பை நிறைவாக வழங்கி ரசிகர்களின் மனதில் இடம் பிடிக்கிறார் கௌதம் வாசுதேவ் மேனன். வில்லனாக நடித்திருக்கும் சரண்ராஜ் வழக்கமான நடிப்பு.
கௌதம் வாசுதேவ் மேனனை தொடர்ந்து ரசிகர்களை ஆச்சரியப்படுத்துபவர் ஒளிப்பதிவாளர் நவீன் குமார். இவருடைய ஒளிப்பதிவில் காட்சிகள் சிறப்பு. பின்னணி இசையில் விவேக் - மெர்வின் தேறினாலும் பாடல்களில் கோட்டை விட்டிருக்கிறார்கள்.
ஹிட்லர் - பெயரில் மட்டுமே 'ஹிட்'.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM