தயாரிப்பு : கோல்டன் ஈகிள் ஸ்டுடியோஸ்
நடிகர்கள் : விஜய் சத்யா, ஷெரின், சம்யுக்தா, கராத்தே ராஜா, வனிதா விஜயகுமார், இமான் அண்ணாச்சி, ஏ.வெங்கடேஷ், சிசர் மனோகர் மற்றும் பலர்.
இயக்கம் : ஏ. வெங்கடேஷ்
மதிப்பீடு : 2 / 5
அறிமுக நடிகர் விஜய் சத்யா கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'தில் ராஜா' அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்ததா? இல்லையா? என்பதை தொடர்ந்து காண்போம்.
விஜய் சத்யா ,சுப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்தின் ரசிகர். நான்கு சக்கர வாகனங்களை பழுது பார்ப்பதை தன்னுடைய பொழுதுபோக்காக கொண்டவர்.
கட்டிட வரைபட பொறியாளராக தனியார் நிறுவனத்தில் பணியாற்றுகிறார். இவருக்கு ஷெரின் ( துள்ளுவதோ இளமை புகழ் நடிகை) மனைவி. இந்த தம்பதியினருக்கு ஒரு பெண் குழந்தை. இந்த குழந்தையின் பிறந்த நாளை கொண்டாடுவதற்காக வணிக வளாகத்திற்கு செல்கிறார்கள்.
திரும்பும் போது மாநில அமைச்சர் பாண்டியின் மகன் மற்றும் அவரது நண்பர்கள் இவர்களை வழிமறித்து பாலியல் தொல்லை தருகிறார்கள்.
ரஜினிகாந்த்தின் ரசிகரான கதையின் நாயகன் விஜய் சத்யா அவர்களை தட்டி கேட்கிறார்.
இந்த தருணத்தில் எதிர்பாராத விதமாக அமைச்சரின் மகன் இறந்து விடுகிறார்.
இதனால் ஆத்திரமடைந்த அமைச்சர் விஜய் சத்யாவை பழி தீர்க்க திட்டமிடுகிறார்.
இதிலிருந்து நாயகன் எப்படி ரஜினிகாந்தின் ரசிகர்கள் உதவியுடன் தப்பிக்கிறார் என்பதே இப்படத்தின் கதை.
அறிமுக நாயகன் விஜய் சத்யா எக்சன் காட்சிகளில் அதிரடியாக நடித்திருக்கிறார். நடன காட்சிகளிலும் தன் நாட்டிய திறமையை வெளிப்படுத்துகிறார்.
ஆனால் நடிப்பில் மட்டும் தடுமாறுகிறார். கதாநாயகியாக நடித்திருக்கும் நடிகை ஷெரின் முகத்தில் இளமையும் மிஸ்ஸிங். நடிப்பும் மிஸ்ஸிங்.
ரசிகர்களுக்கு ஆறுதல் தருவது நாயகனின் நண்பனாக வரும் நடிகர் கே பி வை பாலா மட்டும் தான்.
முதல் பாதியை விட இரண்டாம் பாதியில் சில காட்சிகள் சுவராசியமாக இருக்கிறது. இருப்பினும் லாஜிக் கிலோ என்ன விலை? என கேட்கிறார்கள். ஏ. வெங்கடேஷ் படம் என்பதற்கான பிரத்யேக முத்திரை ஒரு இடத்தில் கூட இல்லை.
ஒளிப்பதிவு, பின்னணி இசை, படத்தொகுப்பு , கலை இயக்கம், என அனைத்தும் குறைந்த பட்ச தரத்தில் இருக்கிறது.
தில் ராஜா - கில் ராஜா.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM