bestweb

சசிகுமாருடன் முதல் முறையாக இணையும் சிம்ரன்

Published By: Digital Desk 2

28 Sep, 2024 | 06:12 PM
image

நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிக்கும்  பெயரிடப்படாத திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக நடிகை சிம்ரன் நடிக்கிறார் என படக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குநர் அபிஷான் ஜீவின்ந் இயக்கத்தில் உருவாகும் பெயரிடப்படாத திரைப்படத்தில் சசிகுமார், சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், கமலேஷ், யோகி பாபு, ரமேஷ் திலக், எம்.எஸ். பாஸ்கர், பக்ஸ் என்ற பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள். 

அரவிந்த் விஸ்வநாதன் ஒளிப்பதிவு செய்யும் இந்த திரைப்படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைக்கிறார். 

குடும்ப பொழுதுபோக்கு சித்திரமாக தயாராகும் இந்த திரைப்படத்தை மில்லியன் டொலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம் ஆர் பி என்டர்டெயின்மென்ட் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள்  நஸரேத் பஸ்லியான், மகேஷ் ராஜ் பஸ்லியான், யுவராஜ் கணேசன் ஆகியோர் இணைந்து தயாரிக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் தொடங்கும் என்றும், அடுத்த ஆண்டு கோடை மாத விடுமுறையில் இப்படத்தை வெளியிட திட்டமிடப்பட்டிருப்பதாகவும் படக்குழுவினர் உற்சாகத்துடன் தெரிவித்துள்ளனர்.

'அயோத்தி', 'கருடன்', 'நந்தன்' என தொடர்ச்சியாக ஹாட்ரிக் வெற்றியை வழங்கிய நட்சத்திர நடிகர் சசிகுமார் கதையின் நாயகனாக நடிப்பதாலும், 'பேட்ட' படத்தில் சிம்ரனும், சசிக்குமாரும் நடித்திருந்தாலும் இந்தத் திரைப்படத்தில் முதன் முதலாக இவர்கள் ஜோடியாக இணைந்திருப்பதாலும் படம் தொடர்பான அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியானதும் படத்தைப் பற்றிய எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்