நடிகர் ரஞ்சித் கதையின் நாயகனாக முதன்மையான வேடத்தில் நடித்திருக்கும் 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.
இதனை மூத்த இயக்குநர் கே. பாக்யராஜ் வெளியிட்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தார்.
இயக்குநர் வெங்கட் ஜனா இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'இறுதி முயற்சி' எனும் திரைப்படத்தில் ரஞ்சித், மேகாலீ, விட்டல் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
சூர்யா காந்தி ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சுனில் லாசர் இசையமைத்திருக்கிறார்.
உளவியல் சார்ந்த படைப்பாக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை வரம் சினிமாஸ் எனும் நிறுவனம் தயாரித்திருக்கிறது.
சிறிய முதலீட்டில் தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தின் கிளர்வோட்டத்தில் கதையின் நாயகனான ரஞ்சித் , தூக்கத்தில் நடக்கும் வினோதமான பழக்கத்தைக் கொண்டவராகவும், அதனால் ஏற்படும் உளவியல் ரீதியிலான பாதிப்புகளை மையப்படுத்தி காட்சிகள் இடம் பிடித்திருப்பதால் ரசிகர்களிடத்தில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM