யோகி பாபு நடிக்கும் 'மிஸ் மேகி' படத்தின் டீசர் வெளியீடு

Published By: Digital Desk 2

28 Sep, 2024 | 06:09 PM
image

'மெஹந்தி சர்க்கஸ்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமான சமையல் கலை நிபுணர் மாதம்பட்டி ரங்கராஜ் கதையின் நாயகனாக நடித்திருக்கும் 'மிஸ் மேகி' எனும் திரைப்படத்தின் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இயக்குநர் லதா ஆர். மணியரசு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'மிஸ் மேகி' எனும் திரைப்படத்தில் மாதம்பட்டி ரங்கராஜ், ஆத்மிகா, யோகி பாபு, மாறன், பாண்டியன் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கௌதம் ராஜேந்திரன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கார்த்திக் மற்றும் கார்த்திக் ராஜா ஆகியோர் இணைந்து இசையமைத்திருக்கிறார்கள். 

இந்த திரைப்படத்தை ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் மற்றும் மாதம்பட்டி சினிமாஸ் ஆகிய பட நிறுவனங்கள் சார்பில் தயாரிப்பாளர்கள் வெடிக்காரன்பட்டி எஸ். சக்திவேல் மற்றும் மாதம்பட்டி டி. பி. ரங்கராஜ் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கு பிந்தைய தொழில்நுட்ப பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படத்தில் கிளர்வோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.

இதில் யோகி பாபு அழகான ஆங்கிலோ இந்திய பெண்மணியாக தோன்றுவதால் படத்திற்கு பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

நடிகர் ரிச்சர்ட் ரிஷி நடிப்பில் உருவாகும்...

2025-02-12 17:05:51
news-image

நடிகர் தேவ் நடிக்கும் 'யோலோ' படத்தின்...

2025-02-12 17:06:14
news-image

நடிகர் ரியோ ராஜ் நடிக்கும் 'ஸ்வீட்ஹார்ட்'...

2025-02-12 17:05:29
news-image

எஸ்.ஏ.சந்திரசேகர் நடிக்கும் 'கூரன்' திரைப்படத்தின் வெளியீட்டுத்...

2025-02-12 16:50:42
news-image

தமிழ்நாட்டு விஞ்ஞானி ஜி.டி.நாயுடுவின் வாழ்க்கை வரலாறு...

2025-02-12 16:51:14
news-image

பிரைம் வீடியோவில் வெளியாகும் கதிர் -...

2025-02-12 16:22:53
news-image

தமிழ் திரையுலக பிரபலங்கள் இணைந்து வெளியிட்ட...

2025-02-12 15:59:29
news-image

யோகி பாபு நடித்திருக்கும் 'லெக் பீஸ்'...

2025-02-12 14:51:36
news-image

'காதல் என்பது பொதுவுடமை' படத்தின் இசை...

2025-02-11 22:33:07
news-image

சாதனை படைத்து வரும் நடிகர் பிரதீப்...

2025-02-11 17:30:29
news-image

விக்ரம் பிரபு நடிக்கும் புதிய படத்தின்...

2025-02-11 17:20:45
news-image

நடிகர் லியோ. சிவக்குமார் நடிக்கும் 'டெலிவரி...

2025-02-11 17:19:29