பருத்தித்துறை - வல்லிபுரம் கோவில் பகுதியில் சட்டவிரோதமாக கடல் மணல் அகழ்வில் ஈடுபட்ட நபரொருவரை கடற்படையினர் கைதுசெய்துள்ளனர்.

குறித்த சந்தேக நபரை கடற்படையினர் நேற்று கைதுசெய்துள்ளனர்.

குறித்த நபர் அனுமதிப்பித்திரமின்றி கடல் மணல் அகழ்வில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் கைதுசெய்யப்பட்ட நபர் மற்றும் அவர்பயன்படுத்திய பாரவூர்தி என்பன மேலதிக நடவடிக்கைகளுக்காக பருத்தித்துறை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக கடற்படையினர் தெரிவித்தனர்.