மொனராகலை - புத்தல வீதியில் விபத்து ; பாடசாலை மாணவர்கள் உட்பட நால்வர் காயம்

28 Sep, 2024 | 11:04 AM
image

மொனராகலை - புத்தல வீதியில் ஹொரொம்புவ பிரதேசத்தில் இடம்பெற்ற விபத்தில் பாடசாலை மாணவர்கள் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளதாக மொனராகலை பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்து  வெள்ளிக்கிழமை (27) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.

பண்டாரவளையிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த தபால் திணைக்களத்திற்கு சொந்தமான வேன் ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இரண்டு முச்சக்கரவண்டிகளுடன் மோதி பின்னர் பஸ் தரிப்பிடத்தில் இருந்த இரு பாடசாலை மாணவர்கள் மற்றும் தாயொருவர் மீது மோதி அருகிலிருந்த கடை ஒன்றில் மோதியதில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.

இந்த விபத்தின் போது, ஓரு முச்சக்கரவண்டியின் சாரதியும் இரு பாடசாலை மாணவர்களும் தாயொருவரும் காயமடைந்துள்ள நிலையில் மொனராகலை மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த முச்சக்கரவண்டி சாரதியின் உடல் நிலைமை மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மொனராகலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

மாற்றத்தை ஏற்படுத்தும் மாற்றத்துக்காக மனப்பாங்கு ரீதியாகவும்...

2026-05-16 13:11:49
news-image

சிட்னியில் முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி திறப்பு

2026-05-16 12:59:04
news-image

ரயில் விபத்து : தண்டவாள ஆணிகளை...

2026-05-16 12:46:55
news-image

பாரம்பரிய நாகரிகத்துடன் அபிவிருத்தி இணையும்போது மட்டுமே...

2026-05-16 12:36:54
news-image

பேராதனை பாலத்தின் கட்டுமானப் பணிகள் 4...

2026-05-16 12:04:14
news-image

பஸ்னாகொட நீர்த்தேக்கத்தின் 3 வான்கதவுகள் திறப்பு...

2026-05-16 11:35:00
news-image

உலக செஸ் சம்மேளன தலைவர் இலங்கைக்கு...

2026-05-16 11:30:35
news-image

ஹிருணிகா பிரேமச்சந்திர உள்ளிட்ட இருவருக்கு பிடியாணை...

2026-05-16 11:08:52
news-image

வாகன இறக்குமதிக்கு 50 சதவீத கூடுதல்...

2026-05-16 11:14:55
news-image

முள்ளிப்பொத்தானை பகுதியில் இளைஞனின் சடலம்!

2026-05-16 10:38:47
news-image

நாட்டின் இரு வேறு பகுதிகளில் விபத்துக்கள்...

2026-05-16 12:16:58
news-image

தேசிய வீடமைப்பு அதிகாரசபையின் வீட்டுத்திட்டத்துக்காக ஒதுக்கப்படும்...

2026-05-16 10:27:02