ஐ.பி.எல்.தொடரின் நேற்றைய போட்டியில் பெங்களூர் அணியை எதிர்கொண்ட குஜராத் அணி 7 விக்கட்டுகள் மற்றும் 37 பந்துகளால் அபார வெற்றிபெற்றது.

இந்த போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி 20 ஓவர்கள் நிறைவில் சகல விக்கட்டுகளையும் இழந்து 134 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

பெங்களூர் அணி சார்பில் அணித்தலைவர் பவன் நெகி 32 ஓட்டங்களையும், ஜாதேவ் 31 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பந்துவீச்சில் என்ரு டை 12 ஓட்டங்களுக்கு 2 விக்கட்டுகளை கைப்பற்றினார்.

இந்நிலையில் பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய குஜராத் அணி ஆரோன் பின்ச்சின் அதிரடியின் உதவியுடன் 13.5 ஓவர்களில் 3 விக்கட்டுகளை இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதிரடியாக துடுப்பெடுத்தாடிய ஆரோன் பின்ச் 34 பந்துகளில் 72 ஓட்டங்களை குவித்தார்.

இதேவேளை போட்டியின் சிறப்பாட்டக்காரராக அன்ரு டை தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த போட்டியின் முடிவின்படி புள்ளிப்பட்டியலில் 6 புள்ளிகளுடன் குஜராத் அணி ஆறாவது இடத்துக்கு முன்னேறியுள்ளதுடன், பெங்களூர் அணி 5 புள்ளிகளுடன் 7 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளது.