(நெவில் அன்தனி)
டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் குறைந்த இன்னிங்ஸ்களில் அதிக சதக்கங்கள் குவித்தவர்களுக்கான பட்டியலில் சேர் டொனல்ட் ப்றட்மனின் சாதனையை சமப்படுத்திய இலங்கையின் உலக சாதனை நாயகன் கமிந்து மெண்டிஸ், ஆசியாவுக்கான சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
நியூஸிலாந்துக்கு எதிராக காலி சர்வதேச விளையாட்டரங்கில் நடைபெற்றுவரும் இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் தனது முத ல் 13 இன்னிங்ஸ்களில் 5ஆவது சதத்தைப் பூர்த்திசெய்து வரலாறு படைத்தார்.
இதன் மூலம் டொன் ப்றட்மனின் 13 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் என்ற சாதனையை கமிந்து மெண்டிஸ் சமப்படுத்தியுள்ளார்.
அவர்களை விட மூவர் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைக் குவித்துள்ளனர்.
மேற்கிந்தியத் தீவுகளின் எவர்ட்டன் வீக்ஸ் (10 இன்னிங்ஸ்கள்), இங்கிலாந்தின் ஹேர்பட் சட்க்ளிவ் (12), அவுஸ்திரேலியாவின் நீல் ஹாவி (12) ஆகியோர் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைப் பூர்த்தி செய்தவர்களாவர்.
எவ்வாறாயினும் ஆசிய கிரிக்கெட் வீரர்களில் குறைந்த இன்னிங்ஸ்களில் 5 சதங்களைக் குவித்த வீரர் என்ற அசிய சாதனையை கமிந்து மெண்டிஸ் நிலைநாட்டினார்.
பாகிஸ்தான் வீரர் பவாட் அலாம் 22 இன்னிங்ஸ்களில் 5 சதங்கள் குவித்ததே இதற்கு முன்னர் ஆசிய சாதனையாக இருந்தது.
நியூஸிலாந்துக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் சற்று நேரத்திற்கு முன்னர் கமிந்த மெண்டிஸ் 133 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
இலங்கை அதன் முதல் இன்னிங்ஸில் 5 விக்கெட்களை இழந்து 508 ஓட்டங்களைப் பெற்றிருந்தது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM