நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட இரண்டு துப்பாக்கிகளையும் டி-56 ரக துப்பாக்கியொன்றையும் வைத்திருந்த மூவர் நேற்று வியாழக்கிழமை (27) கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
நுகங்முவ பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தெல்கஹமடில்ல பகுதியில் உள்ள கடை ஒன்றில் T56 ரக துப்பாக்கி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதுடன், துப்பாக்கி எண் அழிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் கும்பலொலுவ பகுதியைச் சேர்ந்த 51 வயதுடைய ஓய்வுபெற்ற இராணுவ சிப்பாய் என தெரியவந்துள்ளது.
இதேவேளை, நாவுல, அரிஸ்டன் வீதி பகுதியில் பொலிஸார் மேற்கொண்ட சுற்றிவளைப்பின் போது, உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்டவர் கொங்கஹவெல பகுதியைச் சேர்ந்த 55 வயதுடையவராவார்.
மேலும், எத்திமலை, தொரத்துபிட்டிய பகுதியில் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கியுடன் மற்றுமொரு சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் அத்தமலை குளம் பகுதியில் வசிக்கும் 39 வயதுடையவராவார்.
இதனையடுத்து, குறித்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவித்துள்ளனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM