19 வயதின் கீழ் மகளிர் மும்முனை கிரிக்கெட்: நியூஸிலாந்துக்கு எதிராக இலங்கை இரண்டாவது வெற்றி

Published By: Vishnu

27 Sep, 2024 | 12:26 AM
image

(நெவில் அன்தனி)

குவீன்ஸ்லாந்து, கோல்ட் கோஸ்ட் பில் பைப்பன் ஓவல் விளையாட்டரங்கில் நியூஸிலாந்துக்கு எதிராக வியாழக்கிழமை (26) நடைபெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் மும்முனை கிரிக்கெட் போட்டியில் 7 ஓட்டங்களால் வெற்றிபெற்றது.

அணித் தலைவி மனுதி நாணயக்காரவின் திறமையான துடுப்பாட்டம், சமோதி ப்ரபோதா, ப்ரமுதி மெத்சரா ஆகிய இருவரின் துல்லியமான பந்துவீச்சுகள் என்பன இலங்கை அணியின் வெற்றியில் பிரதான பங்காற்றின.

இரண்டு அணிகளுக்கும இடையில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்ற போட்டியில் நியூஸிலாந்தை 69 ஓட்டங்களால் இலங்கை வெற்றிகொண்டிருந்தது.  

அப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட இலங்கை மகளிர் அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 110 ஓட்டங்களைப் பெற்றது.

மனுதி நாணயக்கார 41 ஓட்டங்களையும் விமோக்ஷா பாலசூரிய 24 ஓட்டங்களையும் தஹாமி சனேத்மா 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

மனுதி நாணயக்கார, தஹாமி சனேத்மா ஆகிய இருவரும் 5ஆவது விக்கெட்டில் 59 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கை அணியைப் பலப்படுத்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய 19 வயதுக்குட்பட்ட நியூஸிலாந்து அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்களை இழந்து 103 ஓட்டங்களை மட்டும் பெற்று தோல்வி அடைந்தது.

ஈவ் வொலண்ட் 23 ஓட்டங்களையும் இசபெல் ஷார்ப் 22 ஓட்டங்களையும் டார்சி ரோஸ் ப்ரசாத் 18 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் சமோதி ப்ரபோதா 12 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் ப்ரமுதி மெத்சரா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை யும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: மனுதி நாணயக்கார

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

ஆஸி.யை மீண்டும் வீழ்த்தி தொடரை முழுமையாக...

2025-02-14 00:18:39
news-image

ஐசிசி ஒழுக்க விதிகளை மீறிய பாகிஸ்தானியர்...

2025-02-13 19:28:02
news-image

கில் அபார சதம், கொஹ்லி, ஐயர்...

2025-02-13 18:17:21
news-image

ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண சிறப்பு தூதுவர்களாக...

2025-02-13 17:23:02
news-image

மாலைதீவில் கராத்தே பயிற்சி மற்றும் தேர்வு

2025-02-13 10:26:53
news-image

சுவிட்சர்லாந்தில் கராத்தே பயிற்சி பாசறை

2025-02-13 10:43:37
news-image

சரித் அசலன்க சதம் குவித்து அசத்தல்;...

2025-02-12 18:57:16
news-image

இலங்கையுடனான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் குனேமானின்...

2025-02-12 12:02:33
news-image

உலகக் கிண்ணத்துக்கு சிறந்த அணியை கட்டியெழுப்புவதை...

2025-02-11 19:22:29
news-image

அவுஸ்திரேலியாவுக்கு எதிரான ஒருநாள் தொடருக்கான இலங்கை...

2025-02-11 09:21:46
news-image

ரோஹித் ஷர்மா 32ஆவது ஒருநாள் சதம்...

2025-02-10 12:42:11
news-image

இரண்டாவது டெஸ்டில் இலங்கையை 9 விக்கெட்களால்...

2025-02-09 16:26:20