(நெவில் அன்தனி)
தஜிகிஸ்தானில் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட ஆசிய கால்பந்தாட்ட கூட்டு சம்மேளன (AFC) ஆசிய கிண்ண தகுதிகாண் சுற்றில் இலங்கை இளைஞர் அணி மிக மோசமான தோல்விகளைத் தழுவியுள்ளது.
ஈ குழுவில் இடம்பெறும் இலங்கை தான் விளையாடிய 3 போட்டிகளில் எதிரணிகளுக்கு 12 கோல்களை விட்டுக் கொடுத்துள்ளது. ஆனால் இலங்கை சார்பாக ஒரு கோலும் போடப்படவில்லை.
இந்த மூன்று போட்டிகளிலும் ஒரு சிலரைத் தவிர மற்றையவர்கள் தொடர்ந்து விளையாடி வருகின்ற போதிலும் அவர்களிடம் எவ்வித முன்னேற்றத்தையும் காண முடியவில்லை.
அடுத்து சுற்றுக்கு செல்லும் வாய்ப்பை இழந்துள்ளதால் இலங்கை பயிற்றுநர் இராஜமணி தேவசகாயம், இதுவரை பார்வையாளர்களாக வீரர்கள் ஆசனத்தில் இருந்த வீரர்களுக்கு வாய்ப்பு கொடுத்து அவர்களின் ஆற்றல்களைப் பரீட்சிப்பாரேயானால் அது வரவேற்கத் தக்கதாக இருக்கும்.
கோல்காப்பாளர் அஹமத் ஷரீப் 12 கோல்களை விட்டுக்கொடுத்துள்ளதால் புதிய கோல் காப்பளாளர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பது குறித்து பயிற்றுநர் சிந்திப்பது நலம். வெறுமனே 22 வீரர்களை அழைத்துச் சென்று அவர்களில் சிலரை வெறும் பார்வையாளர்களாக வைத்திருப்பது எந்த வகையிலும் நியாயம் இல்லை என கால்பந்தாட்ட விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.
வட கொரியாவுடனான முதலாவது போட்டியில் 0 - 4 எனவும், தஜிகிஸ்தானுடான இரண்டாவது போட்டியில் 0 - 3 எனவும் தோல்வி அடைந்த இலங்கை, நேற்று நடைபெற்ற மூன்றாவது போட்டியில் ஓமானிடம் 0 - 5 என தோல்வி அடைந்தது.
தஜகிஸ்தானின் துஷன்பே, குடியரசு மத்திய விளையாட்டரங்கில் நேற்று நடைபெற்ற போட்டியின் முதலாவது பகுதியில் முழு ஆதிக்கம் செலுத்திய ஓமான், முதல் 38 நிமிடங்களில் 4 கோல்களைப் போட்டு இலங்கை அணியை திக்குமுக்காட வைத்தது.
போட்டியின் 12ஆவது நிமிடத்தில் ஓடே அல் மன்வாரி, 18ஆவது நிமிடத்தில் முஹாந்த் அல்-சாதி, 34ஆம், 38ஆம் நிமிடங்களில் யூசுவ் அலி அல் ஷபிபி ஆகியோர் கோல்களைப் போட்டு ஓமானை இடைவேளையின்போது 4 - 0 என முன்னிலையில் இட்டனர்.
இடைவேளைக்குப் பின்னர் போட்டியின் 56ஆவது நிமிடத்தில் பைஸால் அல் ஹாதிதி கோல் நிலையை 5 - 0 என ஓமானுக்கு சார்பாக உயர்த்தினார்.
அதன் பின்னர் இலங்கை அணி தடுத்தாடும் உத்தியைக் கையாண்டதாலும் ஓமான் பிரதான வீரர்களை மாற்றியதாலும் ஆட்டத்தில் விறுவிறுப்பு காணப்படவில்லை.
இறுதியில் ஓமான் 5 - 0 என்ற கோல்கள் வித்தியாசத்தில் இலகுவாக வெற்றியீட்டியது.
இலங்கை தனது கடைசிப் போட்டியில் மலேசியாவை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை எதிர்த்தாடவுள்ளது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM