இன்றைய சூழலில் எம்மில் பலரும் தங்களுடைய வாழ்வாதாரத்திற்காக அரசாங்க பணி வாய்ப்பு கிடைக்கும் என காத்திருப்பது வீண்.
இதனால் காலத்தை வீணடிக்காமல் நண்பர்களுடன் இணைந்தோ அல்லது தனித்தோ உங்களுக்கு பிடித்த தொழிலை சிறிய அளவில் தொடங்குவது தான் புத்திசாலித்தனமானது.
சிலருக்கு இந்த அறிவுரை பிடித்திருக்கும். அவர்களும் இதனை பின்பற்ற தீர்மானித்திருப்பார்கள். ஆனால் அவர்களுக்கு பணம் இருந்தால் தொழில் நடத்துவதற்கான அல்லது விற்பனை நிலையத்தை தொடங்குவதற்கான காணி கிடைப்பதில் கடினம் ஏற்படலாம்.
விற்பனை நிலையத்திற்கு பொருத்தமான காணி கிடைத்தால்... அதற்கான தொகை அதிகமாக இருக்கும்.
அதனைத் தொடர்ந்து தொகையும் , காணியும் கிடைத்தாலும் விற்பனை நிலையத்திற்கு பணியாற்றுவதற்கு உரிய தொழிலாளர்கள் கிடைப்பதில் பாரிய சிக்கல் ஏற்படும்.
இப்படி தொழிலை தொடங்குவதில் அல்லது நினைத்த காரியத்தை நடத்துவதில் தடைகளும், தாமதங்களும், சிக்கல்களும் ஏற்பட்டால் அதனை களைந்து வெற்றி பெறுவது எப்படி? என்பது குறித்து எம்முடைய ஆன்மீக முன்னோர்கள் பல நுட்பமான குறிப்புகளை வழங்கியிருக்கிறார்கள்.
சனிக்கிழமைகளில் அருகில் இருக்கும் கருமாரி அம்மன் ஆலயத்திற்கு சென்று அம்மனை வழிபட வேண்டும்.
தொடர்ந்து பத்து வாரம் சனிக்கிழமைகளில் இந்த கருமாரி அம்மன் வழிபாட்டை பய பக்தியுடனும், காரியத் தடை நீங்க வேண்டும் என்ற பிரார்த்தனையுடனும் மேற்கொண்டால் உங்கள் காரியத்தில் ஏற்பட்ட தடைகளும், தாமதங்களும் விலகி, நீங்கள் நினைத்த விடயம் கை கூடுவதை அனுபவத்தில் காணலாம்.
கருமாரி அம்மன் வழிபாட்டினை சனிக்கிழமைகளில் மேற்கொள்வதில் ஏதேனும் அசௌகரியங்களும், சிக்கல்களும் இருந்தால் திங்கள் கிழமைகளில் மேற்கொள்ளலாம் திங்கட்கிழமையை மேற்கொள்பவர்களும் தொடர்ந்து பத்து திங்கள் கிழமை கருமாரியம்மன் வழிபாட்டை மேற்கொள்ள வேண்டும்.
இதில் எம்மில் சிலர் அதிபுத்திசாலிகள் சிலர் இருப்பர். விரைவான பலன் கிடைக்க வேண்டும் என்பதற்காக சனி மற்றும் திங்கட்கிழமைகளில் தொடர்ச்சியாக கருமாரியம்மனை வழிபடுவர். இதனை தவிர்க்க வேண்டும்.
திங்கட்கிழமை அல்லது சனிக்கிழமை ஏதேனும் ஒரு கிழமையை தெரிவு செய்து அதில் கருமாரியம்மன் தொடர்ச்சியாக பத்து வாரங்கள் வழிபட வேண்டும்.
சிலருக்கு பத்து வாரங்களுக்கு பிறகு எதிர்பார்த்த அளவில் தடைகளும் , தாமதங்களும் விலகவில்லை என்றால் இணையதளத்தில் தமிழகத்தில் உள்ள அம்பிகையின் அருள் பெற்ற தலமான திருக்கடையூர் அபிராமியின் புகைப்படத்தை பதிவிறக்கம் செய்து கொண்டு, அதனை புகைப்படம் ஆக்கி உங்களது பூஜை அறையில் வைத்து நெய் தீபம் ஏற்றி தொடர்ந்து பத்து வாரங்கள் வழிபாட்டு வாருங்கள்.
தடைகளும், தாமதங்களும் விலகி காரியம் நிறைவேறுவதை அனுபவத்தில் காணலாம்.
அதே தருணத்தில் காரியத்தில் எந்த தடையும் அதாவது சூட்சமமாக எந்தத் தடையும் ஏற்படக் கூடாது என்பதற்காக பச்சரிசி மாவு மற்றும் இனிப்பு கலந்த தின்பண்டத்தை எறும்புகளுக்கு உணவாக வழங்கி வாருங்கள்.
நீங்கள் கருமாரி அம்மனை வழிபட்டு வரும் பத்து வாரங்களில் இதனையும் தொடர்ச்சியாக பின்பற்றினால் உங்களது எண்ணம் ஈடேறும்.
வேறு சிலருக்கு இதனைக் கடந்தும் காரியத்தில் வெற்றி கிடைக்காமல் தடைகளும், தாமதங்களும் ஏற்பட்டால் உங்களது வலது கையில் சிறிதளவு கருப்பு எள்ளை எடுத்து வைத்துக் கொள்ளுங்கள்.
சனிக்கிழமை அன்று காலையில் வீட்டை விட்டு வெளியே செல்லும் தருணத்தில் வீட்டில் இருந்தபடியே உங்களது வலது கையில் இருக்கும் கருப்பு எள்ளை உங்கள் தலையை அப்பிரதட்சணமாக அதாவது வலமிருந்து இடமாக இல்லாமல் இடமிருந்து வலமாக 19 முறை சுற்றிவிட்டு அந்த எள்ளை யார் பாதத்திலும் படாத அளவிற்கு வெளியில் வீசி விடுங்கள்.
அத்துடன் நீங்கள் அன்றைய கிழமையில் அணிந்து செல்லவிருக்கும் காலணியை நீரால் சுத்தப்படுத்திய பின் அணிந்து சென்றால் நீங்கள் நினைத்து செல்லும் காரியம் வெற்றியைத் தரும்.
தொகுப்பு : சுபயோக தாசன்
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM