மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஏத்தாளைக்குளம் காட்டுப்பகுதியில் ஏற்பட்ட தீ கட்டுப்படுத்தப்பட்டது.
ஏத்தாளைக்குளம் மற்றும் அதனை அண்டிய பகுதியானது சுற்றுச்சூழல் பாதுகாப்பு வலயமாகவும் பறவைகள் சரணாலயமாகவும் இருந்துவருகிறது.
அப்பகுதியில் இன்று ஏற்பட்ட தீ விபத்தினை தொடர்ந்து அப்பகுதிக்கு வந்த களுவாஞ்சிக்குடி பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபை உத்தியோகத்தர்கள் தீயினை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டனர். இதனால் தீ பரவுவது கட்டுப்படுத்தப்பட்டதோடு, பாரிய சேதம் தவிர்க்கப்பட்டது.
இந்நிலையில், அப்பகுதிக்கு சென்ற வனஜீவராசிகள் திணைக்கள உத்தியோகத்தர்களும் தீ விபத்து தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
இந்த தீ தற்செயலாக பரவியதா அல்லது திட்டமிட்ட செயற்பாடா என்பது தொடர்பில் தகவல்கள் இதுவரை வெளியாகாத நிலையில், உண்மையை கண்டறியும் நோக்கில் களுவாஞ்சிக்குடி பொலிஸார் விசாரணைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM