உலகளவில் பிறக்கும் குழந்தைகளில் 20 முதல் 37 சதவீத குழந்தைகள் பிளாட் புட் எனப்படும் தட்டையான பாத அமைப்புடன் பிறப்பதாகவும், இவர்களில் பெரும்பாலானவர்களுக்கு ஐந்து வயதிற்கு பிறகு இத்தகைய தட்டையான பாத அமைப்பு மாற்றம் பெறுகிறது என்றும், மிகக் குறைவான சதவீதத்தினருக்கு மட்டுமே இத்தகைய தட்டையான பாத அமைப்பின் காரணமாக காலில் வலி ஏற்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அவசியமாகிறது என்றும் வைத்திய நிபுணர்கள் தெரிவிக்கிறார்கள்.
பிறக்கும் குழந்தைகள் ஒரு வயதிற்குள்ளாக நிற்கவும், நடக்கவும் தொடங்குவார்கள். இவர்களில் பலருக்கும் பாதத்தில் வளைவுகள் உருவாகாமல் தட்டையான பாத அமைப்புடன் இருக்கலாம்.
இத்தகைய அமைப்புடன் இருக்கும் பிள்ளைகள் ஐந்து வயது வரை எந்த பாதிப்பினையும் எதிர்கொள்வதில்லை.
அதன் பிறகு அவர்களுக்கு பாத பகுதியில் வளைவு ஏற்பட்டு இயல்பான பாத அமைப்பு உண்டாகக்கூடும்.
அதே தருணத்தில் சில பிள்ளைகளுக்கு தட்டையான பாத அமைப்பு இருந்து அவர்கள் நடக்கும் போது வலி ஏற்பட்டால் உடனடியாக அவர்களை தூக்குமாறு சைகைகள் காட்டுவர்.
அவர்கள் சிறிது தொலைவிற்கு நடப்பதற்கும் சிரமப்படுவார்கள். அவர்களின் பாத அமைப்பை துல்லியமாக அவதானித்தால் அவை தட்டையான பாத அமைப்பினை கொண்டிருந்தால் அவர்கள் கால் வலியினால் தான் அசௌகரியத்தை எதிர்கொள்கிறார்கள் என பொருள் கொள்ளலாம்.
இதற்கு உரிய தருணத்தில் முறையான சிகிச்சையை மேற்கொள்ளாவிட்டால் அவர்களின் நடையில் மாற்றம் ஏற்படும். மேலும் தொடர்ந்து நடப்பதற்கும் சிரமப்படுவார்கள்.
இது அவர்களின் ஆயுள் முழுவதுமான பிரச்சனை என்பதால் உடனடியாக இதற்கு தீர்வு காண வேண்டும்.
தட்டையான பாத அமைப்புடன் பிறந்த குழந்தைகளை உடனடியாக இதற்கான பிரத்தயேகமான சிகிச்சை நிபுணரிடம் அழைத்துச் சென்று காண்பிக்க வேண்டும்.
அவர்கள் தட்டையான பாத அமைப்பின் காரணமாகத்தான் வலி ஏற்படுகிறது என்பதனை உறுதி செய்து கொள்ள சில பரிசோதனைகளை பரிந்துரைப்பர்.
அதனைத் தொடர்ந்து பிரத்யேக காலனி, இயன்முறை பயிற்சி ஆகியவற்றை வழங்கி தட்டையான பாத அமைப்பில் ஏதேனும் மாற்றமும், முன்னேற்றமும் ஏற்படுகிறதா? என அவதானிப்பர்.
முழுமையான நிவாரணம் கிடைக்காத போது வேறு சில பரிசோதனைகளை மேற்கொண்டு பிள்ளைகளின் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு பாதத்தில் நுண் துளை சத்திர சிகிச்சை மேற்கொண்டு இத்தகைய தட்டையான பாத அமைப்பிற்கு இயல்பான பாத அமைப்பு உண்டாவதற்கான நிவாரண சிகிச்சையை வழங்குவர்.
இதன் பிறகு அந்த பிள்ளைகள் நடப்பதிலும், நிற்பதிலும் பாரிய மாற்றங்கள் ஏற்படும்.
இதனூடாக தட்டையான பாத அமைப்பிற்கு முழுமையான நிவாரணத்தை பெற முடியும் என வைத்திய நிபுணர்கள் விவரிக்கிறார்கள்.
வைத்தியர் பார்த்திபன்
தொகுப்பு அனுஷா
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM