ஜீவா நடிக்கும் 'பிளாக்' படத்தின் முன்னோட்டம் வெளியீடு

Published By: Digital Desk 2

26 Sep, 2024 | 05:22 PM
image

தமிழ் திரையுலகின் சிறிய முதலீட்டு திரைப்படங்களுக்கான நாயகனாக திகழும் நடிகர் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளாக்' எனும் திரைப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது. 

இதனை நடிகர் ஆர்யா அவருடைய இணைய பக்கத்தில் வெளியிட்டு, படக் குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்திருக்கிறார்.

இயக்குநர் கே. ஜி. பாலசுப்பிரமணி இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'பிளாக்' எனும் திரைப்படத்தில் ஜீவா, பிரியா பவானி சங்கர், விவேக் பிரசன்னா, ஷா ரா, ஸ்வயம் சித்தா, யோக் ஜே பி உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

கோகுல் பினோய் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு சாம் சி .எஸ். இசையமைத்திருக்கிறார்.

ஹாரர் திரில்லர் ஜேனரில் தயாரான இந்த திரைப்படத்தை பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் எல் எல் பி நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர்கள் எஸ். ஆர். பிரகாஷ் பாபு, எஸ். ஆர். பிரபு, பி. கோபிநாத், ஆர். தங்க பிரபாகரன் ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் படப்பிடிப்பு குறித்த  அறிவிப்பு எதுவும் அதிகாரப்பூர்வமாக வெளியாகாத நிலையில் திடீரென்று இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது.‌

இந்த முன்னோட்டத்தில் 'டிமான்டி காலனி 2 'எனும் ஹாரர் திரில்லர் படத்தில் தனித்துவமான நடிப்பால் ரசிகர்களை கவர்ந்த நடிகை பிரியா பவானி சங்கர் இந்த திரைப்படத்திலும் அதே போன்றதொரு கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார் என்பதும், இவருடன் நடிகர் ஜீவா இணைந்திருக்கிறார் என்பதும் தெரிகிறது.

இதனால் இந்த திரைப்படத்திற்கு இணையவாசிகளிடம் குறிப்பாக திரில்லர் ஜேனரை விரும்பும் பார்வையாளர்களின் கவனத்தை பெற்றிருக்கிறது.

இதனிடையே தமிழ் திரையுலகில் ஓரளவு சந்தை மதிப்பு கொண்ட நடிகரான ஜீவா கடந்த ஆண்டில் ஒரே ஒரு படத்தில் மட்டும் கௌரவ வேடத்தில் நடித்திருந்தார் என்பதும், இதன் காரணமாகவே அவருடைய சந்தை மதிப்பு குறைந்துவிட்டது என்பதும், அதனால் அவரது நடிப்பில் உருவாகி இருக்கும் 'பிளாக்' திரைப்படத்திற்கு திரையுலக வணிகர்களிடையே போதிய வரவேற்பு இல்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்