இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளி மூஸ் குளோதிங்

26 Sep, 2024 | 09:56 AM
image

(நெவில் அன்தனி)

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெறவுள்ள ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் பங்குபற்றும் இலங்கை மகளிர் அணிக்கான உத்தியோகபூர்வ ஆடையை (ஜேர்சி) மூஸ் குளோதிங் நிறுவனம் வழங்கியது.

ஸ்ரீலங்கா கிரிக்கெட்டின் உத்தியோகபூர்வ ஆடை பங்காளியான மூஸ் குளோதிங் நிறுவனத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹாசிப் ஓமர்,   ஸ்ரீலங்கா கிரிக்கெட் தலைமையக வளவில்       நடைபெற்ற வைபவத்தின்போது    இலங்கை மகளிர் அணிக்கான ஜேர்ஸியை அணித் தலைவி சமரி அத்தபத்துவிடம் வழங்கினார்.

இந்த வைபவத்தில் இலங்கை மகளிர் கிரிக்கெட் அணி பயிற்றுர் ருமேஷ் ரட்நாயக்கவும் கலந்துகொண்டிருந்தார்.

'இலங்கை மகளிர் அணிக்கான புதிய ரி20 உலகக் கிண்ண ஜேர்ஸியை அறிமுகப்படுத்துவதில் பெருமை அடைகிறோம்.  இலங்கையின் பெறுமதிமிக்க பாரம்பரியங்களையும் இயற்கை எழில்களையும் எடுத்துக்காட்டும் வகையில் இந்த ஜேர்சி வடிவமைக்கப்பட்டுள்ளது. பெக்கோ மலைத் தொடர், தேயிலைத் தோட்டங்கள் ஆகியவற்றின் இயற்கை காட்சிகள் இந்த ஜேர்சியில் பதிக்கப்பட்டுளளன. இந்த ஜேர்சியை வழங்கும் சந்தர்ப்பத்தில் இலங்கை அணிக்கு எமது நிலையான ஆதரவு என்றென்றும் இருக்கும் என்பதை உறுதிப்படுத்துகிறோம். அவர்கள் வெற்றிபெற்று இலங்கையின் புகழைப் பரவச் செய்வார்கள் என நம்புகிறேன்' என மூஸ் குளோதிங் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஹாசிப் ஒமர் தெரிவித்தார்.

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நடப்பு சம்பியன் அவுஸ்திரேலியா, இந்தியா, நியூஸிலாந்து, பாகிஸ்தான் ஆகிய அணிகளுடன் ஏ குழுவில் இலங்கை இடம்பெறுகிறது.

ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ணப் போட்டி ஷார்ஜாவில் எதிர்வரும் 3ஆம் திகதி ஆரம்பமாவதுடன் இலங்கை தனது முதலாவது போட்டியில் பாகிஸ்தானை அன்றைய தினம் எதிர்த்தாடுகிறது.

முக்கிய செய்திகள்

icon-left
icon-right

தொடர்பான செய்திகள்

news-image

தனது பதவியை இடைநிறுத்தியதற்கு நியாயம் கோரி...

2025-01-13 15:21:48
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் போட்டிகளில் ஆரம்ப...

2025-01-13 10:05:18
news-image

மெல்பேர்ன் டெஸ்டுடன் டெஸ்ட் போட்டிகளில் இருந்து...

2025-01-13 10:05:39
news-image

24H சீரிஸ் கார் ஓட்டப் பந்தயத்தில்...

2025-01-13 04:59:17
news-image

மென்செஸ்டர் SA ஏற்பாட்டில் அழைப்பு கால்பந்தாட்ட...

2025-01-12 22:09:08
news-image

பெத்தும், குசல், ஜனித் ஆகியோர் அரைச்...

2025-01-11 17:55:14
news-image

கடைசி ஒருநாள் போட்டியில் ஆறுதல் வெற்றிக்கு...

2025-01-11 02:04:33
news-image

தேசிய ஒலிம்பிக் குழுவின் பொதுச் செயலாளர்...

2025-01-11 02:05:50
news-image

19 வயதுக்குட்பட்ட மகளிர் ரி20 உலகக்...

2025-01-10 13:20:22
news-image

இலங்கைக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு ஸ்மித்...

2025-01-10 10:33:06
news-image

இலங்கையை 2 ஆவது போட்டியிலும் வெற்றிகொண்ட...

2025-01-08 15:02:22
news-image

நியூஸிலாந்துக்கு எதிராக ஹெட் - ட்ரிக்...

2025-01-08 17:08:15