யாழில் மோட்டார் சைக்கிள் வேனுடன் மோதியதில் குடும்பஸ்தர் ஒருவர் புதன்கிழமை (25) உயிரிழந்துள்ளார். 1ஆம் வட்டாரம், புங்குடுதீவு பகுதியைச் சேர்ந்த இலட்சுமிகாந்தன் தனஞ்சயன் (வயது - 36) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,
இவர் கடந்த 15ஆம் திகதி யாழ்ப்பாணம் - பண்ணை வீதியால் சென்றுகொண்டிருந்த வேளை, வீதியால் சென்ற வேன் மீது இவரது மோட்டார் சைக்கிள் கைப்பிடி தட்டுப்பட்டது. இந்நிலையில் அவர் கீழே விழுந்து மயங்கியுள்ளார்.
அங்கு இருந்தவர்கள் அவரை மீட்டு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்ப்பித்தனர். இருப்பினும் சிகிச்சை பலனின்றி அவர் புதன்கிழமை (25) இரவு 10 மணியளவில் உயிரிழந்துள்ளார்.
அவரது சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி நமசிவாயம் பிறேம்குமார் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.
கருத்து
தேரர்களின் ஆக்கிரமிப்புக்கள் மீண்டும் பிரபாகரனை உருவாக்குவதற்கான செயற்பாடு - வ.ஐ.ச.ஜெயபாலன் விசேட செவ்வி
25 Sep, 2022 | 11:25 AM
அனைத்தும் புதிதாக உருவாக்கபடல் வேண்டும்
08 Aug, 2022 | 09:07 AM
நமக்கு தெரிந்த முன்னைய ரணில் வெளிக்கிளம்புவார் என்று நம்புவோம் - கலாநிதி ஜெகான் பெரேரா
08 Aug, 2022 | 09:15 AM
நியாயப்பாடுடைய அரசாங்கத்தை நிறுவ ஜனாதிபதி கடுமையாக பாடுபடவேண்டியிருக்கும்
08 Aug, 2022 | 09:12 AM
போராட்டங்கள் ஊடாக பிரஜைகள் வழங்கும் அரசியல் செய்திகளை புரிந்துகொள்ளல்
27 May, 2022 | 11:24 AM